ஆர்யா, பூஜா, அசின்.. மூவரும் இணைந்து அறிமுகமான படம்.. தள்ளிப்போனதால் நேர்ந்த சோகம்..

Published on: September 13, 2022
---Advertisement---

எந்த வித சக போட்டியாளரும் இல்லாமல் தனி டிராக்கில் பயணித்துக்கொண்டிருப்பவர் ஆர்யா. தொடக்கத்தில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த ஆர்யாவுக்கு, சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் சரியாக கைக்கொடுக்கவில்லை.

“சார்பட்டா பரம்பரை” நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சென்ற வாரம் வெளியான “கேப்டன்” திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. எனினும் ஆர்யாவிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் அவரது டிராக் எந்த தடங்களும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அசின். பல திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த அசின் தமிழின் டாப் நடிகையாக திகழ்ந்தார். அசின் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸான காலமெல்லாம் உண்டு. அந்த அளவுக்கு பிசியான நடிகையாக திகழ்ந்து வந்தார்.

அதே போல் ரசிகர்களின் சிங்களத்து சின்னக்குயிலாக திகழ்ந்த பூஜா, டாப் மாடல் அழகியாக வலம் வந்தார். எனினும் “நான் கடவுள்” திரைப்படத்தில் யாரும் எதிர்பார்த்திராத சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இந்த மூவரும் இணைந்து அறிமுகமான திரைப்படம் தான் “உள்ளம் கேட்குமே”. இத்திரைப்படத்தை ஜீவா இயக்கியிருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட் ஆனது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “ஓ மனமே” என்ற பாடல் இப்பொழுதும் பலருக்கு கண்ணீரை வரவைப்பவை.

இதில் ஷாம், லைலா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் தான் அசின், ஆர்யா, பூஜா ஆகியோர் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்கள். இம்மூவரும் நடித்த முதல் திரைப்படம் “உள்ளம் கேட்குமே” தான் என்றாலும் இத்திரைப்படம் வெளியாக மூன்று ஆண்டுகள் தாமதம் ஆனது. அதாவது 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது.

ஆனால் “உள்ளம் கேட்குமே” வெளிவருவதற்குள் மூவரும் நடித்த இரண்டாவது திரைப்படம் வெளிவந்துவிட்டது. அசின் நடித்த “எம் குமரன்” திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்துவிட்டது. ஆர்யா நடித்த “அறிந்தும் அறியாமலும்” திரைப்படம் 2005 மே மாதமே வெளிவந்துவிட்டது. அதே போல் பூஜா நடித்த “ஜே ஜே”, “அட்டகாசம்” போன்ற திரைப்படங்கள் 2003, 2004 ஆம் ஆண்டுகளிலேயே வெளிவந்துவிட்டது. இதனால் இவர்கள் நடித்த முதல் திரைப்படம் இரண்டாவது திரைப்படமாக ஆகிப்போன நிலை ஏற்பட்டுவிட்டது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.