அதுலதான் அவர் வாழ்க்கையே இருக்கு! செல்ஃப் எடுக்காம தத்தளிக்கும் சார்பட்டா 2.. அப்போ அவ்ளோதானா

Published on: April 4, 2024
arya
---Advertisement---

Sarpatta Paramparai : ஆர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமைந்தது. குஸ்தியை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் ஆர்யாவுடன் பசுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.

படத்தை பா.ரஞ்சித் இயக்க சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாகி எட்டுத்திக்கும் வரவேற்பை பெற்றது. அதுவும் ஆர்யாவின் கெரியரில் இப்படி ஒரு படமா? என ஆச்சரியத்தை வரவழைத்தது. யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை இந்தப் படம் பெற்றது. இந்த வெற்றியின் தாக்கம் சார்பட்டா பரம்பரையில் இரண்டாவது பாகத்தை எடுக்கும் முடிவுக்கு தள்ளியது.

இதையும் படிங்க: கண்ணாடி போல சேலை!.. கண்ட அழகையும் காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்!..

பா. ரஞ்சித்தும் கண்டிப்பாக இரண்டாவது பாகம் வருவது உறுதி என கூறி வந்தார். அதை செயல்படுத்த ஜீ ஸ்டூடியோவுடன் ஆர்யாவும் முனைப்பு காட்டி வந்தார். இரண்டாம் பாகத்தை 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கவும் திட்டமிட்டார்கள். ஜீ ஸ்டூடியோஸ்தான் தயாரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த ப்ராஜக்ட்டில் இருந்து ஜூ ஸ்டூடியோஸ் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் சார்பட்டா 2 படம் ஆரம்பிக்கப்படுவதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் வேறொரு தயாரிப்பாளர்களை தேடி அலைகிறார்களாம்.

இதையும் படிங்க: 33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..

இதற்கு மத்தியில் சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்தப்படமும் அமையவில்லை. அதனால் இதன் இரண்டாம் பாகத்தை நம்பித்தான் ஆர்யா இருந்தார். இப்போது அந்தப் படத்திற்கும் இப்படி ஒரு சிக்கல் எனும் போது ஆர்யாவின் பாடு திண்டாட்டம்தான் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.