Indian 2: கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. படத்தின் ஒரு அறிமுக டீஸர் ஒன்று சமீபத்தில் வெளியானது. வழக்கம் போல நம் நெட்டிசன்களும் இந்த டீஸர் வெளியானதில் இருந்து டிகோடிங்க் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2 .இதன் முதல் பாகம் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. லஞ்சம் என்பது அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்தது. அதனால் இந்தியாவில் இந்த படத்திற்கு எதிர்ப்பு என்பது வரவில்லை.
இதையும் படிங்க:ஓயாத ரெட் கார்ட் சர்ச்சை… மாயாவின் அடுத்த எவிக்சன் ப்ளான்… கமலுக்கு அடுத்த வாரம் எமகண்டம் தான் போல..!
ஆனால் இரண்டாம் பாகம் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை. இரண்டாம் பாகம் என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட நினைத்ததை விட படத்தின் நீளம் அதிகமாகவே வந்ததாம். அதனால் மூன்றாம் பாகமாக அதை உருவாக்கி விட்டார்கள்.
எடுத்தவரைக்கும் இந்தியன் – 3யாகத்தான் இருக்கிறது. இந்தியன் 2 க்காக மீண்டும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த டீஸரில் காஜல் அகர்வால் தெரியவில்லை. விசாரித்ததில் அவர் இந்தியன் 3ல் தான் வருகிறாராம்.
இதையும் படிங்க: தேவையில்லாமல் குடைச்சல் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! ‘லால்சலாம்’ படம் வர வாய்ப்பே இருக்காது போல
மற்றபடி சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த டீஸரில் ஒரு சீனில் தெருவில் நின்று கொண்டு சித்தார்த் உட்பட அனைவரும் வரிசையாக கையில் தட்டுடன் கரண்டியால் அடித்து ஒலி எழுப்புவது போன்ற காட்சி இருக்கும்.
இது கொரானா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு முறையாக பார்க்கப்பட்டது. அதாவது கொரானாவை ஓட ஓட விரட்ட அனைவரும் வீட்டின் வாயில் நின்று ஒலி எழுப்புங்கள் என்று சொல்லப்பட்டது. ஒருவேளை இது சம்பந்தமான காட்சிகள் இந்தியன்2வில் இருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வைரல்.. ஆதரவாக களமிறங்கிய சூப்பர்ஸ்டார்..!
ஆனால் உண்மையிலேயே மத்திக்கு முன்பாகவே இந்த முறையை படத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் காட்சி 2019 ஆம் ஆண்டு கொரானாவுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட காட்சியாம். அதன் பின் தான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் கமல் ஒரு தீர்க்கதரிசிதான்பா. எல்லாத்துக்கும் அவர் தான் முன்னுதாரணமா இருக்கிறார் என்று சொல்லிவருகிறார்கள்.