செம க்யூட் ஜோடி!. சிறப்பா நடந்த அசோக் செல்வன் திருமணம்!.. வைரல் புகைப்படங்கள்!..
தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே நடித்து வருபவர் அசோக் செல்வன். பல படங்களில் நடித்து ஒன்றும் தேராத நிலையில் தெகிடி, ஓ மை கடவுளே ஆகிய படங்கள் அவருக்கு கை கொடுத்தது. அந்த பட ஹிட்டுக்கு பின் நிறைய படங்களில் நடிக்க துவங்கினார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘போர்த்தொழில்’ படத்திலும் நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு திடீரென நடிகர் அருண் பாண்டியன் மகளும் தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் நடித்த கீர்த்திக்கும் அசோக் செல்வனுக்கும் விரைவில் திருமணம் என செய்திகள் வெளியானது. கீர்த்தியின் அப்பா அருண் பாண்டியன் ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இதையும் படிங்க: டெய்லி நைட் அது பண்ணாம இருக்க முடியல!.. ஆன்ட்டி நடிகை அவசரமாக வெளியேற அதுதான் காரணமா?
விஜயகாந்தின் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அசோக் செல்வனும், கீர்த்தியும் காதலிப்பதாக கூட இதற்கு முன் செய்திகள் வெளியாகவில்லை. திடீரென திருமண செய்திதான் வெளியானது. பலருக்கும் இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று காலை உறவினர்களும், நண்பர்களும் சூழ அசோக் செல்வன் - கீர்த்தி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில், கீர்த்தியின் நெருங்கிய உறவினரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த மாசமே அண்ணாவோட மாசம் தான் போல!.. 1000 கோடிக்கு லம்ப்பா ஸ்கெட்ச் போட்ட விஜய்!..