நன்றி மறவாத நம்ம தெகிடி பட நாயகன்..! வாழ்த்துக் கூறிய ரசிகர்கள்...
அசோக் செல்வன் - தமிழ் திரையுலகில் பேசப்படும் நடிகர். இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தெகிடி படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பால் மக்களிடையே மிகவும் ஈர்க்கப்பட்டார்.
கைவசம் பெரிய அளவில் படம் ஏதுமில்லை என்றாலும் அனி.ஐ.வி. சசி இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன் நடித்திருக்கும் காதல், நகைச்சுவை திரைப்படம் "தீனி". இப்படத்தினை தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
இன்னியோட இப்படம் வந்து ஒரு வருடம் ஆன நிலையில் எல்லோருக்கும் நன்றி சொல்லும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் இப்படத்தின் படக்குழுவினருடன் எடுத்த சில போட்டோக்களை பதிவிட்டு "இந்த அழகிய திரைப்படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. என்னை இந்த நிலைமைக்கு உருவாக்கிய அழகான மனிதர்களுக்கு என்றென்றும் அன்புக்குரியவனாக இருப்பேன். மேலும் என் அன்பான மக்களே, நீங்கள் எங்களுக்கு அளித்த அனைத்து அன்பிற்கும் நன்றி" என்ற கமென்டையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.