தோல்வியால் விரக்தி- ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி..மகிழ்ச்சியில் ஸ்லீப்பிங் ஸ்டார்

by ராம் சுதன் |
aswin kumar
X

நடிகர் அஷ்வின் குமார் கோவையில் பிறந்து, " ரெட்டை வால் குருவி, நினைக்காத நாள் இல்லை" உள்ளிட்ட டிவி சீரியல் மூலம் தமிழ்த் மக்களுக்கு அறிமுகமானவர்.

"ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா" உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்த அஷ்வின் குமார், " குக் வித் கோமாளி" சமயல் நிகழ்ச்சி மூலமாக பல தமிழ் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

aswin kumar

டிவி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு "என்ன சொல்லப் போகிறாய்" என்ற படத்தில் அறிமுகமான அஷ்வின் குமார், "வெப் தொடர், இசை ஆல்பம்" என்று நடித்து தனது மார்க்கெட்டை உயர்திகொண்டார்.

சமீபத்தில் வெளியான இவரின் திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் பேசியது சர்ச்சைக்கு உரிய முறையில் அமைந்த நிலையில், படமும் சரியாக போகாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அஷ்வின் குமார், தற்போது ஒரு தமிழ் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் விடியோ வெளியாகி, அஷ்வின் குமார் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story