Connect with us
ashwin

Cinema News

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்குறாரு மனுஷன்.. வைரலாகும் அஸ்வின் வீடியோ…

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ எனப்பேசியிருந்தார்.

ashwin

இது கடும் சர்ச்சையானது. அவரை கிண்டலடித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் வைரலானது. மேலும், Sleeping Star என அவருக்கு பட்டத்தையும் அவருக்கு கொடுத்துள்ளனர். அவரின் பேச்சால் அவர் நடித்த ‘என்ன சொல்லப்போகிறாய்’ படத்தின் வெளியீடே தள்ளிப்போனது. எனவே, கடந்த ஒரு மாதமாகவே வீட்டில் முடங்கி கிடந்தார் அஸ்வின்.

ashwin

தற்போது ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை வந்திருந்தார். அப்போது, ஒரு குழந்தையை எடுத்து அவர் கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மதுஸ்ரீ ஹரி என்கிற போட்டோகிராபர் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஸ்வினின் இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்…

google news
Continue Reading

More in Cinema News

To Top