ஜோதிகாவ அந்த விஷயத்துல மாத்தவே முடியாது.. சூர்யாவே இப்படி சொல்லிட்டாரே.

by Rohini |   ( Updated:2025-04-27 00:44:48  )
suriya
X

suriya

Suriya: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்து அதன் பின் காதலர்களாக மாறி கடைசியில் திருமணத்தில் ஒன்றிணைந்தார்கள். இவர்கள் திருமணத்திற்கு ஆரம்பத்தில் சிவக்குமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் இருவருமே காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் பின் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதிலிருந்து இன்றுவரை சூர்யா மற்றும் ஜோதிகா ஒரு சிறந்த தம்பதிகளாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சென்னையில் வசித்து வந்த இவர்கள் தற்போது மும்பையில் செட்டிலாகி விட்டார்கள். அதிலிருந்தே ஜோதிகா ஹிந்தியில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மும்பை சென்ற பிறகு அவருடைய ஸ்டைலே மாறிவிட்டது.

சென்னையில் இருந்த வரைக்கும் தமிழ் நாட்டு மருமகளாக சேலையில் காட்சியளித்த ஜோதிகா மும்பையில் குடியேறியதும் மும்பை வாசியாகவே மாறிவிட்டார். சூர்யாவும் சென்னைக்கு அவ்வப்போதுதான் வந்தவண்ணம் இருக்கிறார். இருவருமே இப்போது படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள். சூர்யா ரெட்ரோ படத்தில் நடித்து முடித்து விட்டு ஆர் ஜே பாலாஜி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஐதரபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் சூர்யா தெரிவித்தார். அதாவது லக்கி பாஸ்கர் படத்தை எடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க போவதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். இது சூர்யாவின் 46வது படமாகும். இந்தப் படத்திற்கு ஜிவி தான் இசையமைக்கப் போகிறார்.

இந்த படம் குறுகிய கால படைப்பு என்பதால் வெகு சீக்கிரமாகவே படப்பிடிப்பை ஆரம்பித்து முடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த விழாவில் தொகுப்பாளினி சூர்யாவிடம் ஒரு கேள்வியை கேட்டார். அதாவது மனைவியிடம் சாரி சொல்வது ஈஸியா? அல்லது மனைவியை சாரி சொல்ல வைப்பது ஈஸியா? என்ற கேள்வியை சூர்யாவிடம் கேட்டார். அதற்கு முதலில் இந்த கேள்வியே தவறு என்று சூர்யா சொன்னார். இருந்தாலும் சாரி சொல்ல வைப்பது டஃப். அதனால் பெஸ்ட் சாய்ஸ் சாரி கேட்பதுதான் என சொல்லி சிரித்துக் கொண்டார் சூர்யா.

Next Story