ஒன்னுமே புரியலை… நீங்க சும்மா இருக்கலாமே ஷ்யாம்… மரண பீதியை தரும் ”அஸ்திரம்” திரை விமர்சனம்!

Asthiram
Ashthiram: நடிகர் ஷ்யாம் நடிப்பில் வெளியாகி இருக்கும் அஸ்திரம் படத்தின் பிளஸ், மைனஸ்களை பேசும் திரை விமர்சனம் இதோ!
அஸ்திரம் கதை: குற்றவாளிகளை பிடிக்க போன இடத்தில் குண்டு அடி வாங்கும் இன்ஸ்பெக்டர் ஷ்யாம் ஓய்வில் கொடைக்கானலில் இருக்கிறார். அப்போது அங்கு ஒரு தற்கொலை நடக்கிறது. அதுவும் அவர் பிளஸ் சிம்பிள் போல அறுத்துக்கொண்டு செத்து விடுகிறார்.
தொடர்ந்து இதுபோல இரண்டு கொலைகள் நடக்க அதை துப்பறியும் அதிகாரியாகி விடுகிறார் ஷ்யாம். ஆனால் மூன்று நபர்களுக்கும் எந்த சம்பந்த இல்லாமல் இருக்கிறது. ஷ்யாம் எப்படி பிரச்னையை கண்டறிந்தார் என்பதுதான் கதை.
திரில்லர் என்பது புது காமெடி என்னும் நிலைக்கு இந்த படம் தள்ளி இருக்கிறது. எங்குமே சஸ்பென்ஸ் இல்லாமல் சப்பென முடிகிறது. பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் ஷ்யாம் காதல் காட்சிகளுக்கு தான் ஓகே. இதெல்லாம் உங்களுக்கு தேவையா பாஸ் எனக் கேட்க வைக்கிறார்.
Also Read: இந்த ரெண்டு படங்களோட கலவைதான் வீர தீர சூரன்!. பொசுக்குன்னு சொல்லிட்டாரே விக்ரம்!…
சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து இருக்கும் படத்தில் பாடல்கள் படுசுமார் ரகம் தான். இருந்தும் பின்னணி இசையில் கொஞ்சம் தேறி இருக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன் மாஸ் மார்க் வாங்கும் விதத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வேலை செய்து இருக்கிறார்.

Asthiram
ஆனால் இயக்குனரை விட எடிட்டர் பூபதி வேதகிரி தன்னுடைய எடிட்டிங்கில் படத்தை கொஞ்சமாவது காப்பாத்த முயன்று இருக்கிறார். படக்கதை புதிதாக தோன்றுகிறது. ஆரம்பத்தில் சீட் நுனியில் உட்கார்ந்தவர்களை அட இதுவா என தொடர் விசாரணையில் ஹீரோவே அலுப்படைய செய்து விடுகிறார்.