நீங்க கண்டிப்பா அந்த ரேஞ்சுக்கு போவீங்க!.. பல வருடங்களுக்கு முன்பே எம்.ஜி.ஆருக்கு ஜோசியம் சொன்ன ஜோதிடர்!..

by சிவா |   ( Updated:2023-07-30 07:00:22  )
mgr
X

இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆர் அப்பாவின் மறைவுக்கு பின் அம்மாவுடன் கும்பகோணம் வந்து செட்டில் ஆனார். குடும்ப வறுமை காரணமாக ஏழு வயது இருக்கும்போதே நாடகங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் நடித்த பின்னர்தான் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் கிடைத்து பல படங்களில் நடித்து நாடோடி மன்னன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் மாறினார். எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூலில் சக்கை போட்டு போட்டது.

mgr

திரைப்படங்களில் மக்கள் பிரச்சனையை பேசும், ஏழைகளுக்கு உதவும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார். அதுவே அவரை மக்கள் தலைவராகவும் மாற்றியது. அறிஞர் அண்ணாவின் மீது அபிமானம் கொண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் கலைஞர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுக எனும் அரசியல் கட்சியை துவங்கினார். அரசியல் கட்சியை துவங்கி அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே திமுகவை வெற்றி பெற்று முதல்வராகவும் அமர்ந்தார். தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து தமிழ்நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர்.

mgr1

mgr1

இந்நிலையில், எம்.ஜி.ஆர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றுள்ளார். எம்.ஜி.ஆரின் ஜாதகத்தை பார்த்த அந்த ஜோதிடர் ‘நீங்கள் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தில் அமர்வீர்கள்’ என சொன்னாராம். ஆனால், எம்.ஜி.ஆர் அதை நம்பவே இல்லை. அதை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த ஜோதிடர் சொன்னது போலவே மக்களின் ஆதரவை பெற்று தமிழகத்தின் முதல்வராக மாறினார் என்பதுதான் வரலாறு.

இதையும் படிங்க: நாகேஷுக்கெல்லாம் என்னால பாடமுடியாது! சொன்ன பாடகரை கே.பாலசந்தர் என்ன செய்தார் தெரியுமா?

Next Story