தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தும் தொடர்ந்து படங்களில் நடிக்காதவர் சிம்பு. அவர் நடிக்கும் படங்களுக்கு ஒன்று அவரால் பிரச்சனை வரும்.. இல்லையென்றால் வேறு வழியில் சிக்கல் வரும். மொத்தத்தில் சிம்பு படம் என்றாலே அது சிக்கல்தான். பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பூஜை எல்லாம் நடந்தது.
அந்த படத்தில் சந்தானமும் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் டிராப்.. அதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க துவங்கினார் சிம்பு.. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது வரை துவங்கப்படவில்லை..
அதேபோல் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் அந்த படத்திற்கான முழு கதையும் அஸ்வத் மாரிமுத்து எழுதி முடிக்காமல் இருந்திருக்கிறார். ஒருபக்கம், வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடிக்கப்போனார். இதற்கிடையில் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில், சிம்பு படத்தை விட்டுவிட்டு ரஜினியிடம் சொல்வதற்காக ஒரு கதையை உருவாக்கினார் அஸ்வத்.
அதற்கு 2 மாதங்கள் எடுத்துக்கொண்டார். இதனால் சிம்பு கோபமடைந்தார். மேலும், அந்த வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு போய்விட்டது. அஸ்வத் மாரிமுத்துவை கூப்பிட்டு ‘ஏப்ரல் மாசம் நம்ம படம் ஷூட்டிங்.. ரெடியா இரு என’’ என சிம்பு சொல்லியிருக்கிறார். ஆனால், அரசன் படம் ஷூட்டிங் நடப்பதால் சிம்பு வரமாட்டார் என நினைத்து கதையை எழுதாமல் இருந்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.
சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்துவை அழைத்த சிம்பு ‘கதை ரெடியா?’ என கேட்க, ‘இரண்டு மாதத்தில் எழுதி விடுகிறேன்’ என அஸ்வத் சொல்ல சிம்பு கடுப்பாகி விட்டாராம்.. ‘எனக்கு தெரியாது.. ஏப்ரல் மாசம் ஷூட்டிங்’ என சொல்ல அலார்ட் ஆன அஸ்வத் மாரிமுத்து 2 நாட்களில் உட்கார்ந்து முழுக் கதையையும் எழுதி முடித்து விட்டாராம்..
சிம்புவை தொடர்பு கொண்டு ‘ஃபுல் ஸ்கிரிப்ட் ரெடி சார்.. நீங்க எப்ப சொன்னாலும் ஷூட்டிங் போகலாம்’ என சொல்ல சிம்புவே ஆடி போய்விட்டாராம்.. அதன் பின்னரே இருவரும் சேர்ந்து ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தியை போய் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இது தொடர்பான புகைப்படம்தான் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது..
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…