Connect with us

75 வயசுல ஹீரோவா நடிச்ச ஒரே தமிழ் ஹீரோ இவர்தான்.! நீங்க எதிர்பார்க்காத அந்த நபர்..?

Cinema History

75 வயசுல ஹீரோவா நடிச்ச ஒரே தமிழ் ஹீரோ இவர்தான்.! நீங்க எதிர்பார்க்காத அந்த நபர்..?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. இவர் நேற்று தான் தனது 83ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இணைய வாயிலாக பலரும் அன்பை தெரிவித்து வந்தனர்.

கவுண்டமணி கோலோச்சிய காலத்தில் அவருடன் உறுதுணையாக இருந்தவர் சக காமெடியன் செந்தில் என இருவரும் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் தற்போது வரை மாஸ்டர் பீஸ் காமெடிகளாக இருக்கின்றன. அதனை மிஞ்சுவதற்கு ஒரு காம்போ இன்னும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு அளவுக்கு மேல் வயதாகிவிட்ட பின்னர் ஹீரோவாக நடிக்க மாட்டார்கள்.  சிவாஜி, ஜெமினி கணேசன்  போன்ற ஜாம்பவான்கள் கூட தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவில்லை. முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்து விட்டு நகர்ந்து விடுவர்.

இதையும் படியுங்களேன் – விஜயகாந்தை பார்த்தா நான் செத்து போய்டுவேன்!…பொன்னம்பலம் பகீர் பேட்டி….

ஆனால், தான் காமெடியனாக அறிமுகமானாலும், 75 வயதிலும் ஹீரோவாக களமிறங்கினார் கவுண்டமணி. எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ, வாய்மை என மூன்று  திரைப்படங்களில் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 75. அதே போல, கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது 87வாது வயதில் தான் தாதா 87 எனும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

தற்போது உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்திற்கு வயது 70-ஐ தாண்டிவிட்டது. ஆனால் அவர் கவுண்டமணி போல அவரது வயதில் கதாநாயகனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  என்பது ஆச்சரியமூட்டும் உண்மை தகவல்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top