Cinema News
மருத்துவமனையில் இருந்தபடியே ட்யூன் போட்ட இளையராஜா!.. என்ன பாடல் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் தன் கான இசையால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. நிசப்தமான இடங்களில் கூட இவரின் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். நம் மனம் சில சமயங்களில் காயப்படும் போது ஒரு வித இசையோடு அந்த கணத்தை மறக்க முற்படும். அந்த நேரத்தில் பெரும்பாலானோர் தேடுவது இசைஞானியின் இசையைத் தான்.
எல்லா வித உணர்வுகளுக்கும் அவரிடம் இசையின் மூலம் பதில்கள் இருக்கும். சோகத்திற்கு சந்தோஷத்திற்கு, தாலாட்டிற்கு, இரவுப் பாடல்கள் என அனைத்து வித காலத்திற்கும் ஏற்ப அவரின் அற்புதமான பாடல்கள் அமைந்திருக்கின்றன. அன்னக்கிளி படத்தின் மூலம் முதன் முதலில் ட்யூன் போட்டவர் இன்று வரை நம்மை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினி, கமல்,விஜயகாந்த் என அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசைதான் பெருமை சேர்த்தன. நிமிடத்தில் இத்தனை ட்யூன்களா? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு போட்டு முடித்துவிடுவார் இளையராஜா. அதே மாதிரி தான் ஏற்கெனவே போட்டு வைத்த ட்யூன்களாக இருக்கட்டும் அதை ஒரே படத்தில் போட ஆசைப்படுவார்.
அந்த அளவுக்கு தான் அமைத்த அத்தனை ட்யூன்களும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை அவருக்கு. ஒரு சமயம் ரஜினி நடித்த படமான ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் திடீரென இளையராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்.
படத்திற்கான இரண்டு பாடல்கள் மட்டும் வரவேண்டிய நிலை. உடனே இயக்குனர் இளையராஜாவிடம் அந்த இரண்டு பாடல்கள் மட்டும் கிடைத்தால் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து விட்டு ஊட்டியில் இருந்து கிளம்பி விடுவோம் என்று கூறினாராம். உடனே இளையராஜா படத்தின் அந்தப் பாடல்களுக்கு தேவையான ட்யூனை தன் வாயாலேயே போட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு அனுப்பி வைத்தாராம்.
மேலும் எஸ்.பி.பி குரலில் அந்த பாடலை தொலைபேசியின் மூலமாக கேட்டு பிழைகளை சரி செய்து அந்தப் பாடல் பதிவை முடித்துக் கொடுத்தாராம் இளையராஜா. என்ன ஒரு தொழில் பக்தி பாருங்க? அந்தப் பாடல் தான் ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே’ என்ற பாடல். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : சில்க் ஸ்மிதாவிற்கு முன்னோடி பானுமதியா?.. இது என்ன புதுசா இருக்கு?.. அப்படி ஒரு சம்பவம்!..