தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக 80,90களில் வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்தார் ஊர்வசி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். எக்ஸ்பிரஷன் குயின் என்றே ஊர்வசியை அழைக்கலாம். அந்த அளவுக்கு தன்னுடைய முகபாவனைகளால் அனைத்தையும் வெளிப்படுத்தக் கூடியவர்.
இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர ஊர்வசியால் முடியவில்லை. முதலாவதாக, ஊர்வசி மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஊர்வசிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளதை கண்ட பாக்யராஜ், தனது முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்க ஊர்வசியினை ஒப்பந்தம் செய்தார். முந்தானை முடிச்சி பட வெற்றி மூலம் தமது படமும் வெற்றி பெறலாம் என கருதிய பிற இயக்குனர்கள் ஊர்வசி முந்தானை முடிச்சு படத்தினை முதலில் முடிக்க உதவினார்கள்.
இந்த நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் கதைப்படி பாக்யராஜை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பொய்யான சத்தியத்தை செய்து திருமணம் செய்து கொள்ளும் ஊர்வசி பாக்யராஜின் குழந்தையை தன் குழந்தையாக பாவித்து வருவார். இது ஒரு பக்கம் பாக்யராஜிற்கு மனமாறுதலை ஏற்படுத்தும்.
ஆனால் இந்தக் குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஊர்வசியும் அப்போது ஒரு குழந்தை நட்சத்திரம் தான். அந்தப் படத்தில் ஊர்வசி நடிக்கும் போது அவருடைய வயது 13 தானாம். ஆனால் படத்தில் பார்க்கும் போது அப்படி தெரியாது. ஆனால் உண்மையிலேயே 13 வயதில் தான் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தேன் என்று ஊர்வசி ஒரு பேட்டியில் கூறினார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…