பாலா - சூர்யா படத்தில் அவங்களும் நடிக்கிறாங்க!... யார் யார் தெரியுமா?....

by சிவா |   ( Updated:2022-03-14 07:49:40  )
bala
X

தமிழ் சினிமாவில் சேது, பிதாமகன், நான் கடவுள் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. விக்ரம் மகனை வைத்து அவர் இயக்கிய வர்மா படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை கொடுக்காமல், வேறு இயக்குனரை வைத்து எடுத்த கதையெல்லம நடந்தது.

எனவே, கடந்த 4 வருடங்களாக பால எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. தற்போது சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 20ம் தேதி மதுரையில் துவங்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அதர்வா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள் எனவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இதில், அதர்வா ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story