தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு சினிமா ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என நடிகர்கள் தனுஷ், சிம்பு, அதர்வா, விஷால் உள்ளிட்ட 4 பேர் மீது ரெட் கார்டு விதிக்க சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், அதையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனமான லைகா கொஞ்சமும் கண்டு கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது நடிகர் அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறதாம் லைகா நிறுவனம் என்கிற லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..
ஏற்கனவே லைகா தயாரிப்பில் அதர்வா நடித்து வெளியான பட்டத்து அரசன் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் அதர்வாவை வைத்து லைகா நிறுவனம் படம் ஒன்றை தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் வாரிசான அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம போதை ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100, தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ட்ரிக்கர் மற்றும் பட்டத்து அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அங்க எக்ஸ் புருஷன் வேற கல்யாணம் பண்ணப் போறாராம்!.. இங்க சமந்தா யாருக்கு உம்மா கொடுக்குறாங்க?..
ஆனால், இதில் ஒரு சில படங்கள் சுமாராக ஓடிய நிலையில், பல படங்கள் படு தோல்வியை சந்தித்துள்ளன. இந்நிலையில், அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று என கைவசம் 3 படங்களை வைத்து இருக்கும் அதர்வா அடுத்ததாக லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் ஆகாஷ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம்.
விக்னேஷ் சிவனுக்கே லைகாவில் இடம் இல்லாத நிலையில், அவரது உதவியாளர் இயக்கப் போகும் இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகப் போகிறதாம். அதில், அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூரை ஜோடியாக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.