latest news

Atlee: மீண்டும் அப்பாவாகிறார் அட்லீ: ! கியூட் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா அட்லீ

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் முத்திரை பத்தித்தவர் அவர். இவரது இயக்கத்தில் ஷாருக்கான நடித்த ஜவான் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அட்லியின் மனைவி பிரியா.

இந்த நிலையில் பிரியா தங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணையவிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அதாவது தான் இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

காதல் முதல் குடும்பம் வரை

அட்லீ மற்றும் பிரியா இருவரும் நீண்ட காலமாகக் காதலித்து, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திரைத்துறையில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த அட்லீக்கு, பிரியா எப்போதும் ஒரு பெரும் தூணாக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிறந்த மீரின் புகைப்படங்களை அட்லீ அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

மகிழ்ச்சியான அறிவிப்பு

தற்போது பிரியா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இந்தத் தம்பதியினர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர். இதையொட்டி எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

Published by
adminram