பாலிவுட்டில் பலித்ததா அட்லியின் காப்பி மேஜிக்!.. ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கு?..

0
2714

Jawan Review: தமிழ் சினிமாவில் பழைய படங்களை பட்டி டிக்கெரிங் பார்த்து புதிய கலர் அடித்து ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என கல்லா கட்டிய இயக்குனர் அட்லி பாலிவுட்டுக்கு சென்றும் தனது காப்பி மேஜிக்கில் சக்சஸ் காட்டினாரா? இல்லையா? என்பதை ஜவான் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கோலிவுட் இயக்குனர் அட்லி மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து 300 கோடி பட்ஜெட்டில் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் விமர்சனங்களில் பெரும்பாலானவை பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகவே உள்ளன.

இதையும் படிங்க: நயன்தாராவை அசிங்கமா பேசிய அந்த பிக் பாஸ் ஜொள்ளு பார்ட்டி!.. கடுப்பான ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

அட்லி அண்ணா நீ ஜெயிச்சுட்டே, ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு இன்னொரு பிளாக்பஸ்டர் படம், ஜவான் படம் தாறுமாறா இருக்கு என படம் பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விமர்சனங்களை போட்டு தாக்கி வருகின்றனர்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் முதன்முறையாக நயன்தாரா நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் நயன்தாரா ஷாருக்கானுக்கு மறைமுகமாக உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அங்க இருக்க சரக்கை விட நீதான் செமயா போதை ஏத்துற!.. ஜூம் அடித்து பவர் கிக்காகும் யங்ஸ்டர்ஸ்!..

மேலும் வில்லனாக போல் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கடைசிவரை தியேட்டரில் கட்டிப்போட்டு வைத்துள்ள நெட்டிசன்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது என்றும் ஷாருக்கானின் அந்த ஓப்பனிங் சீனே தாறுமாறாக இருக்கிறதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை முதல் விமர்சனங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாகுபலி கிட்ட கட்டப்பாவா மண்டியிட்ட ஷாருக்கானின் ஜவான்!.. அட்வான்ஸ் புக்கிங் இவ்ளோதானா!..

ஜவான் திரைப்படம் முதல் நாளே 100 கோடி அளவுக்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படத்தின் வசூலை ஒரு வாரத்திலேயே முறியடிக்கும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் ஜெயிலர் படத்தின் வசூலை ஜவான் திரைப்படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு பதான் திரைப்படத்தை எடுத்து ஜவான் திரைப்படமும் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்ததாக 3 இடியட்ஸ் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் நடித்து வரும் டன்கி திரைப்படமும் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news