படமா எடுத்துருக்க...? அட்லீயை கிழி கிழினு கிழித்த பிரபல சினிமா தயாரிப்பாளர்...!
தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் அட்லி, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லீ. சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.
தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே தடம் பதித்தார்.அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயை வைத்து தெறி, பிகில், மெர்சல் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். மேலும் விஜயை எந்த மாதிரி ஸ்கீரினில் காண்பித்தால் மக்களுக்குப் பிடிக்கும் என்பதை அட்லீ நன்கு தெரிந்தவர். அதனால் தான் பீஸ்ட் படத்தின் தோல்வியை அடுத்து அட்லீயின் பெயர் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவி வந்தது.
இவர் தற்போது ஷாரூக்கானை வைத்து ஜாவான் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அட்லியை பற்றி சரமாரியாக விமர்சனத்தை அள்ளி இறைத்துள்ளார்.
அவர் எடுத்த பிகில் படத்தை பற்றி திட்டி தீர்த்துள்ளார். அந்த படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஒரு சீனில் கலெக்டர், எஸ்பி, மூத்த அதிகாரிகளின் முன்னாடி பேச்சு வார்த்தை முற்றி போக அந்த ரௌடியை அடி அடினு அடிப்பார். அதை பார்த்த அதிகாரிகள் சும்மா இருப்பார்கள். இதை கே. ராஜன் அதிகாரிகள் என்ன பொட்ட பைலுகளா என அட்லியை கேட்டுள்ளார். விஜயை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அந்த படத்தை எடுத்த இயக்குனரை தான் கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.