விஜய்யின் ஹிட் இயக்குனர்... தமிழ் சினிமாவின் குட் டைரக்டர் அட்லீக்கு பிறந்தநாள்!

atlee

அட்லீ

இயக்குனர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகக்குறைவான படங்களை இயக்கி டாப் இயக்குனராக புகழ் பெற்றிருப்பவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து "ராஜா ராணி" படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

atlee-2

atlee

தான் இயக்கிய முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாவது படத்திலே விஜய்யை வைத்து "தெறி" படத்தை இயக்கி மெகா ஹிட் இயக்குனராக பெயரெடுத்தார். அடுத்தது மெர்சல், பிகில் என விஜய்யை இயக்கி அவரின் நெருக்கமான நண்பராகவும் மாறினார்.

atlee1

atlee

தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து "லயன்" என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அட்லீயின் ராசியான நடிகையான நயன்தாரா கதாநாகியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இன்று 34வது பிறந்தநாள் கொண்டாடும் இளம் இயக்குனர் அட்லீக்கு திரைபிரபலங்கள், நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story