ஏப்பா இதுக்கு பேரு உதவியா!.. நயனுக்கு சான்ஸ்னு சொல்லி விக்கியை கோத்துவிட்ட அட்லீ...
ஷங்கரின் உதவியாளர் அட்லீ. இவர் முதன் முதலில் இயக்கிய ராஜா ராணி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நயன்தாரா. எனவே, இருவரும் அக்கா - தம்பி பாசத்தில் உருகினர். சினிமா விழாக்களில் கூட நயனை தனது அக்கா என அழைத்து வந்தார் அட்லீ.
தற்போது அவர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி படத்தில் கூட நயன்தாராதான் வேண்டும் என அடம்பிடித்து அவரை நடிக்க வைத்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் நயன்தாராவை ஒரு முன்னணி கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என ஆசைப்பட்ட அட்லி, அங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கி கொடுக்கும் முக்கிய ஏஜென்ஸிகளை நயனுடன் சந்திக்க வைத்து இவருக்கு படங்களை வாங்கி கொடுங்கள் என சிபாரிசு செய்துள்ளாராம்.
இது தொடர்பான இவரிடம் பேசுங்கள் என விக்னேஷ் சிவனின் தொலைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டாராம் நயன்தாரா. தற்போது வரை 12 பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை அந்த ஏஜென்ஸிகள் வாங்கி கொடுத்துள்ளது.
ஆனால், இருக்கும் படங்களை முடித்துவிட்டு நயனை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற ஆசையில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். எனவே, தன்னை அழைக்கும் ஏஜென்ஸி நிறுவனங்களிடம் அது சரியில்லை. இது சரியில்லை.. இப்படத்தில் நயன் நடிக்க மாட்டார் என எதாவது காரணத்தை கூறி தட்டி கழித்து வருவதோடு புலம்பி வருகிறாராம் விக்னேஷ் சிவன்.
நயனுக்கு உதவி செய்கிறேன் என ஆர்வக்கோளாறில் அட்லீ செய்த செயல் விக்னேஷ் சிவனுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.