அட்லி ஆடி பாத்திருக்கீங்களா?!...அதுவும் அரபிக்குத்து...வீடியோ பாருங்க....
by சிவா |
X
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். முதல் படமே வெற்றி. அடுத்து விஜயை வைத்து தெறி படத்தை எடுத்தார். அதன் பின்னர் மெர்சல் எனும் படத்தை இயக்கினார். அப்படத்திற்கு பின் பிகில் படத்தை இயக்கினார். தற்போது மும்பையில் தங்கியிருந்து ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்று உலக அளவில் ஹிட் அடித்துள்ள அரபிக்குத்து பாடலுக்கு தனது மனைவி மற்றும் தன்னுடன் பணி புரிபவர்களுடன் இணைந்து அசத்தலாக நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில், அட்லியும் இதை செய்துள்ளார்.
அட்லி நடனமாடி இதுவரை யாரும் பார்த்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story