அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ - இதுல கோட்ட விட்டீங்களே
Atlee Copy Magic: இன்று இந்திய சினிமாவே எதிர்பார்த்திருந்த ஒரு நாள். ஜவான் படம் அட்லீக்கு கை கொடுக்குமா? இல்லை கையை வாறி விடுமா? என்று. ஆனால் எப்பவும் போல அசால்ட் பண்ணியிருக்கிறார் அட்லீ. பக்கா கமெர்ஷியல் பாக்கேஜாக படம் வந்திருக்கிறது என அனைவரின் கருத்தாக இருக்கின்றது.
ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீயை இட்லீ என்று தான் கூப்பிடுவாராம் ஷங்கர். ஆனால் இன்று அந்த ஷங்கரையே இட்லீயாக சாப்பிட்டு விட்டார் அட்லீ என்றுதான் சொல்லவேண்டும். ஷங்கரை மிஞ்சிய ஒரு பிரம்மாண்ட படமாக வெளிவந்திருக்கிறது.
இதையும் படிங்க: இது எப்போ? எனக்கே புதுசா இருக்குங்க… இனிமே சொல்லிட்டு கிளப்புங்க… ஓபனாக உடைத்த விமல்..
படம் எப்படி வரும் என்று எதிர்பார்த்ததை விட எந்தப் படத்தோட காப்பியை வச்சிருக்கிறார் தெரியலயே என்ற குழப்பம் தான் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. ஏனெனில் இதற்கு முந்தையை அட்லீயின் படங்களை பார்த்தால் ஏதாவது ஒரு படத்தின் சாயல் கண்டிப்பாக இருக்கும்.
ராஜா ராணி படத்தை மௌனராகம் படத்தோடு ஒப்பிட்டு பேசினார்கள். மெர்சல் படத்தை அபூர்வ சகோதரர்கள் படத்தோடு ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் அதற்கு இடம் கொடுக்கும் வகையில் அட்லீயும் படத்தில் சில காப்பிகளை வைத்திருந்தார் என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: ஐஸ்கிரீமை காட்டி குழந்தையை ஏமாத்துற மாதிரிதான்! இத வாங்கிக் கொடுத்து ஜோதிகாவை ஆடவைத்த கலா
இருந்தாலும் யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு போங்கள் என அடுத்தடுத்து சிக்ஸர்களை மட்டுமே அடித்துக் கொண்டிருந்தார் அட்லீ. எந்தப் படங்களை காப்பி என்று விமர்சனம் செய்தார்களோ அந்தப் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தன.
இப்பொழுது அந்த லிஸ்டில் ஜவான் படமும் இணைந்திருக்கிறது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது எந்தப் படம் மாதிரி இருக்கிறது என துருவ ஆரம்பித்திருக்கின்றனர்.இந்த நிலையில் ப்ளாஷ்பேக்கில் வரும் நடிகை தீபிகா படுகோனே கதாபாத்திரத்தின் பெயர் ஐஸ்வர்யாவாம்.
இதையும் படிங்க: ஓஹோ புகழில் அப்பா… பக்காவாக ப்ளான் போட்ட அக்கா… நான் மட்டும் என்ன தொக்கா? சௌந்தர்யா ஸ்கெட்ச்!
இது அப்படியே மெர்சல் படத்தின் ப்ளாஷ்பேக்கில் வரும் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் பெயராம். அதிலும் நித்யா மேனன் பெயன் ஐஸ்வர்யா.இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் என்ன அட்லீ கொஞ்சம் யோசிக்க மாட்டீங்களா? என கிண்டலடித்து வருகின்றனர்.