More
Categories: Cinema News latest news

அட்லீக்கு கொக்கி போட்ட டாப் பாலிவுட் நடிகர்… அப்போ அண்ணா பாசமெல்லாம் பொய்யா கோபால்!

Atlee Jawan: ஜவான் படத்தின் வெற்றியால் தற்போது அட்லீயை பாலிவுட் உலகம் கொண்டாடி வருகிறது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து டாப் நாயகர்களின் படங்களினை இயக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி படங்களில் இருந்து தமிழ் படங்கள் ரீமேக் செய்த காலம் எல்லாம் மழையேறி போய்விட்டது. சமீபத்திய காலங்களில் சவுத் இந்தியன் படங்களில் இருந்து தான் பாலிவுட் தொடர்ச்சியாக ரீமேக் செய்து வந்தது. வீரம், கைதி, த்ரிஷ்யம் ஆகிய படங்கள் அனைத்துமே இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 

Advertising
Advertising

இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஜவான். நயன் நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால் படத்தில் பல தமிழ் படங்களின் கதை காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக பலரும் கிண்டல் அடித்து வந்தனர்.

ஆனால் இந்தி ரசிகர்கள் ஜவான் படத்தினை கொண்டாடி வருகின்றனர். இதனால் அட்லீக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இந்தியில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் தளபதி 68 படத்துக்கு பிறகு தமிழில் விஜயை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியில் அதிகரித்து இருக்கும் மார்க்கெட்டால் இனி அட்லீ இந்தி பக்கமே சாய்வார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் களைக்கட்டிய பிரச்னைக்கு இவர் தான் காரணமே? அட நீங்களே இப்படி பண்ணலாமா?

ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தை தயாரிக்க இருக்கிறது. அல்லு அர்ஜூனை அட்லீ அடுத்து இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரின் புஷ்பா படத்தின் ஷூட்டிங்கே இன்னும் மிச்சம் இருக்கும் நிலையில் அதுவும் நடக்காது. இதனால் அட்லீ இந்தி பக்கம் தான் சாய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts