இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை கொடுத்து அட்லீயை தூக்கிய தெலுங்கு நிறுவனம்… அந்த ஹீரோ தான் மாஸ்!..

by Akhilan |   ( Updated:2024-05-28 08:59:00  )
இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை கொடுத்து அட்லீயை தூக்கிய தெலுங்கு நிறுவனம்… அந்த ஹீரோ தான் மாஸ்!..
X

Atlee: ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் வாண்ட்டட் இயக்குனராக மாறி இருக்கிறார் அட்லீ. இதனால் அவரின் அடுத்த பட அப்டேட் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இயக்குனராக அட்லீ பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் படங்களை காப்பியடித்து தான் எடுக்கிறார் என ரசிகர்கள் அவரை கலாய்த்து வந்தனர்.

இதையும் படிங்க: ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

ஆனால் இரண்டாவது படமே கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான விஜயை வைத்து இயக்கினார். படமும் நல்ல வசூலை பெற்றாலும் இங்கும் அட்லீ மீது விமர்சனம் எழுந்தது. ஆனால் சிறிதும் தொய்வில்லாமல் அட்லீக்கு தொடர்ச்சியாக விஜய் வைத்து இயக்க மூன்று படங்கள் கிடைத்தது. தமிழ் சினிமாவில் அவர் இயக்கிய படங்கள் விமர்சிக்கப்பட்டாலும் பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து படம் இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஜவான் படத்தை இயக்கியிருந்தார். பல மொழிகளில் வெளியான இப்படம் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூல் செய்தாலும் அட்லீயை விமர்சிக்கும் கூட்டம் இப்படத்திலும் அவரை விடுவதாக இல்லை. தமிழ் படத்தை மொத்தமாக கொட்டி பாலிவுட் படமாக இயக்கியிருக்கிறார் என அதிகமாக அவரை ட்ரோல் செய்துக்கொண்டு தான் வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுக்கு தான் உங்களுக்கு வேலை ஆகாதுனு சொல்றது… ஜெனியால் கஷ்டப்பட போகும் தாத்தா…

இது ஒரு புறம் இருக்க அட்லீயின் வளர்ச்சி மற்ற இயக்குனர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது. அந்த வகையில் அட்லியின் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அட்லியின் சம்பளம் இதுவரை எந்த இயக்குனர்களும் வாங்காத அளவு கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பளத்திற்கான அட்வான்ஸ் மட்டுமே மிகப் பெரிய தொகை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அட்லி இயக்கப் போகும் அடுத்த படத்தில் தளபதி விஜய், ஷாருக்கான் மற்றும் அல்லு அர்ஜுன் இணையலாம் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story