ஜவான் குழு செய்த வேலை தான் இது... இப்ப என்னால எதுவுமே சொல்ல முடியாது... அடம் பிடித்த அட்லீ...

by Akhilan |
ஜவான் குழு செய்த வேலை தான் இது... இப்ப என்னால எதுவுமே சொல்ல முடியாது... அடம் பிடித்த அட்லீ...
X

அட்லீ

தன் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் ஜவான் படக்குழுவினர் தான் என் கதையை லீக் செய்திருக்கிறார்கள். இதனால் எனது பட லாபத்திற்கு பாதிப்பு வரும் என அட்லீ புலம்பி வருகிறாராம்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை பாலிவுட்டின் ஜவான் படம் தமிழில் வெளியான பேரரசு படத்தின் காப்பி என புகார் எழுந்தது.

அட்லீ

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என டாப் பிரபலங்கள் நடிக்க படம் ஆஹாஓஹோ ஹிட் கொடுத்தது. ஆனால் அப்படம் மௌனராகம் படத்தின் அப்பட்டமான காப்பி எனக் கூறப்பட்டது. தொடர்ந்து விஜயின் தெறி, பிகில் என வெற்றி படங்களை கொடுத்தார். இருந்தும் அப்படத்திலும் அட்லீ சில சீன்களை சுட்டு தான் எடுத்திருக்கிறார் எனக் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் அவர் இயக்கிவரும் படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கும் நிலையில், பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஜவான் படம் பேரரசுவின் காப்பி என புகார் கொடுத்திருக்கிறார்.

ஜவான்

ஜவான்

இந்நிலையில், இப்படி ஒரு தகவலை ஜவான் படக்குழுவில் யாரோ தான் கூறி இருக்க வேண்டும். ஆனால் அதை ரியாக்ட் செய்து விட்டால் விஷயம் வெளியில் கசிந்துவிடும் என்பதால் அமைதியாகவே இருக்கிறாராம். தொடர்ந்து, இப்படி படம் வெளியாகும் முன்னரே புகார் கொடுப்பது எங்க படத்தின் வசூலை பாதிக்கும். இந்த விஷயத்தில் எழுத்துபூர்வமாக எந்த பதிலும் நான் தரமாட்டேன் என போனில் பேசி இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Next Story