
Cinema News
இனி தமிழுக்கு வர சில வருடங்கள் ஆகுமாம்.! வந்தா வச்சி செஞ்சிடுவாங்களோ.!?
இந்த பட கதை அந்த படத்தினுடையது, அந்த காட்சி இந்த படத்தில் இருந்து எடுத்தது என்ன எவ்வளவு ட்ரோல் செய்தாலும், அசராமல் அடுத்தடுத்து தனது ட்ரோல் படிக்கட்டுகளை வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி தனது படங்களின் பிரமாண்ட வசூல் மூலம் வெற்றி வாகை சூடி வருகிறார் இயக்குனர் அட்லீ.
தெறி, மெர்சல், பிகில் என பிரமாண்ட வெற்றிகளை விஜய்க்கு பரிசளித்துவிட்டு, தற்போது அதற்கு பலனாக ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குனர் அட்லீ.
பிகில் திரைப்படம் 2019இல் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு ஷாருக்கான் படம் தற்போது தான் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முடிந்த பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க அட்லீ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- #Breaking : அனுமதி தந்த விஜய்.! களைகட்ட போகுது உள்ளாட்சி தேர்தல்.!
அதனால், தற்போதைக்கு இன்னும் 2,3 வருடங்களுக்கு தமிழுக்கு கால்ஷீட் இல்லை என சொல்லிவிடுவார் போல இயக்குனர் அட்லீ.