தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வசூலில் சாதனை படைத்து வருகின்றது. ஆனாலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர் ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும், அவரது ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்து படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தையடுத்து விஜய் யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது விஜய் மீண்டும் அட்லீயுடன் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வெளியான ‘பிகில்’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.
தற்போது நான்காவதாக அட்லீயுடன் விஜய் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளதையடுத்து மீண்டும் அட்லீயுடன் வேண்டாம் தலைவா என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பல ரசிகர்கள், கண்டிப்பாக படம் பண்ணவேணும். அப்படி பண்ணினாள் படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.
