இந்த பட்ஜெட்ல ஒரு படமே எடுத்துடலாம்!.. சம்பளத்தை பல கோடி ஏத்தி தயாரிப்பாளர்களை அலறவிடும் அட்லீ!...

atlee
மிகவும் சிறு வயதிலேயே இயக்குனரானவர் அட்லி. சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து மிகப்பெரிய படைப்புகளை படைத்து இன்று ஒட்டுமொத்த சினிமாவில் ஒரு தேடப்படும் இயக்குனராக மாறி இருக்கிறார் அட்லீ. நண்பன் எந்திரன் போன்ற சங்கர் படைப்புகளில் உதவியாளராக இருந்திருக்கிறார் அட்லீ.

atlee1
ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்த அட்லி அந்த படத்தில் வெற்றியால் முதல் படத்திலேயே வெற்றி முத்திரையை தக்க வைத்துக் கொண்டார். அதுவும் முதல் படமே தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவை வைத்து ஒரு அழகான காதல் காவியத்தை படைத்தார்.
அதையும் தாண்டி இன்று அரசியலில் கால் பதிக்க தயாராகி வரும் தளபதி விஜயை வைத்து தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை குவித்தார். இப்படி அட்லியின் பெருமை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தமிழை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் பரவியது. அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

atlee2
ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை தயாரித்துக் கொண்டு வருகிறார். அந்தப் படத்தின் முதல் சிங்கிள் நேற்றுதான் வெளியானது. அந்தப் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் அட்லி வேறொரு பரிணாமத்திற்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே அவருக்காக துண்டை போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதையும் படிங்க : ‘டிடி ரிட்டர்ன்ஸி’ன் வெற்றி! சந்தானத்தால் ஆர்யாவுக்கு வந்த சிக்கல்.. எதிர்பார்த்ததுதான்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அட்லீக்கு 50 கோடி சம்பளம் பேசி 10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றால் இன்னும் அவருடைய சம்பளம் எகிற வாய்ப்பு இருக்கிறதாம் .ஜவான் படத்திற்காக அட்லி வாங்கிய சம்பளம் 30 கோடியாம். இதனால் கோடம்பாக்கத்தில் பெரிய அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் படம் வெளியாவதற்கு முன்பே இப்படி கோடி கோடியை தூக்கிக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என கேட்டு வருகின்றனர்.

atle3
அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறாராம் அட்லி. அதாவது "எனக்கு ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை. மூன்று மாதம் தான் ஒரு படத்திற்கான கால்ஷீட் என்றாலும் அந்த படத்திற்காக கிட்டத்தட்ட மூன்று வருஷம் என்னுடைய ஒத்துழைப்பை கொடுத்துக்கொண்டு வருகிறேன்.பல விஷயங்கள் ஒரு படம் முடிவதற்குள் இருக்கின்றது. அதற்காக கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் தான் இது" என ஒரு பெரிய விளக்கத்தையே கொடுக்கிறாராம் அட்லி.
இதையும் படிங்க :பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு நோயா?!.. அதிர்ச்சியில் நண்பர்கள்.. உறைந்து போன திரையுலகம்!..