Cinema News
அடுத்த படத்துக்கு வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட அட்லீ!.. பட்ஜெட் எவ்வளவு கோடி தெரியுமா?…
Atee: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுப்பதை துவங்கி வைத்தார் ஷங்கர். இவர் இயக்கிய எல்லா படங்களுமே அதிக பட்ஜெட் கொண்ட படங்கள்தான். பிரபுதேவாவை வைத்து இவர் எடுத்த காதலன் படம் கூட கோடிகளை கொடுத்து எடுக்கப்பட்டதுதான். எனவே, இவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் ஆசைப்படுவார்கள்.
ஷங்கரின் உதவியாளர்:
இவரின் சிஷ்யர்களில் ஒருவர்தான் அட்லீ. ஷங்கர் இயக்கிய நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. நண்பன் படத்தில் வேலை செய்தபோது அட்லியின் உழைப்பு விஜய்க்கு பிடித்திருந்தது.
அதோடு, ராஜா ராணி படமும் அவருக்கு பிடித்துப்போகவே அட்லியை அழைத்து கதை கேட்டார் விஜய். அப்படி உருவான திரைப்படம்தான் தெறி. விஜயை அவரின் ரசிகர்களுக்கு பிடிப்பது போல் எப்படி அழகாகவும், மாஸாகவும் காட்ட வேண்டும் என்கிற வித்தை அட்லியிடம் இருந்தது.
விஜயின் ஆஸ்தான இயக்குனர்:
எனவே, தொடர்ந்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின், பாலிவுட் பக்கம் போய் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை உருவாக்கினார். இந்த படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த சாதனை படைத்திருக்கிறது. எனவே, அட்லியை அழைத்து நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என துண்டை போட்டார் சல்மான் கான்.
இந்த படத்தை அட்லி, சன் பிக்சர்ஸ் மற்றும் சல்மான் கான் ஆகிய மூவரும் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. சம்பளத்தோடு வியாபரத்தில் குறிப்பிட்ட சதவீதம் லாபமும் கொடுக்க வேண்டும் என அட்லி கேட்டிருப்பதால் அனேகமாக இந்த படத்தில் அவருக்கு 100 கோடிக்கும் மேல் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
சல்மான் கான் பட பட்ஜெட்:
ஒருபக்கம், இந்த படத்தில் சம்பள செலவு போக 250 கோடி பட்ஜெட் கொடுத்திருக்கிறாராம் அட்லி. எனவே, எப்படியும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது. அதோடு, இந்த படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஜப்பானிஷ், சைனிஸ் மற்று ஃபிரென்ச் என மொத்தம் 9 மொழிகளில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: சினிமா உலகில் யாருமே செய்யாத விஷயம்… தன்னலம் கருதாமல் செய்த நெப்போலியன்