இருக்கிறது போதாதுனு இது வேறயா?.. உலகம் முழுவதும் ரசிகர்களை திரட்ட அட்லீ போட்ட திட்டம்!.. தளபதி - 68ன் தரமான சம்பவம்..
தமிழ் சினிமாவில் மிகவும் ஹைப்பில் இருக்கும் நடிகர் விஜய். விஜய் என்றாலே எங்குமில்லாத எனர்ஜி ரசிகர்களிடையே ஏற்பட்டு விடுகிறது. எம்ஜிஆர், ரஜினிக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக விஜய் விளங்குகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இனி வரும் படத்திற்கான அப்டேட்களை தெரிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் வாரிசு படத்தில் நடித்த விஜய் தெலுங்கில் தனக்கான மார்கெட்டை நிலை நிறுத்தவே தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்தார் என்ற பேச்சு நிலவி வருகிறது.
இதையும் படிங்க : சேர்ந்தே இருப்பது கலையும் கமலும்….! பிரிக்க முடியாதது…நம்மவரும் டெக்னாலஜியும்…!!
ஆனால் இதற்கு முன் விஜயின் துப்பாக்கி படம் ஆந்திராவில் வெளியாகி அப்பொழுது இருந்தே தெலுங்கு ரசிகர்களை திரட்டி வைத்திருந்தார் விஜய். ஏற்கெனவே கேரளாவில் விஜயின் கொடிதான் பறந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் விஜய்க்கு பாலிவுட்டிலும் தன் கொடியை நிலை நாட்ட வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
அந்த ஆசையை நிறைவேற்றவே அட்லீ இருக்கிறார் என்றும் கூறினார். ஏனெனில் அட்லீ ஏற்கெனவே சாரூக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஷாரூக்கானுக்கும் அட்லீக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறதாம். சமீபத்தில் கூட பதான் படத்தை பற்றி விஜய் போட்ட ட்வீட் வேகமாக வைரலானது. விஜயின் டிவிட்டால் கோடிக்கணக்கான ரசிகர்களும் அதை பார்த்ததனால் பதான் படத்திற்கு அது ஒரு விளம்பரமாக அமைந்ததால் விஜய்க்கு மிகவும் சந்தோஷத்துடன் ஷாரூக்கான் நன்றியை தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவும் ஒரு விதத்தில் அட்லீயின் ப்ளானாக இருக்கலாம் என்று செய்யாறு பாலு கூறினார். இந்த ஒரு டிவிட்டால் தளபதி - 68 ல் கண்டிப்பாக ஷாரூக்கானை நடிக்க வைக்கவும் திட்டம் வைத்திருக்கிறார் அட்லீ என்றும் அதன் மூலம் பாலிவுட்டில் விஜய்க்கு ரசிகர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் செய்யாறுபாலு தெரிவித்தார்.