“தளபதி 68” படம் கல்லா கட்ட அட்லி போட்ட பிளான்… இனி பேன் இந்தியாதான் டார்கெட்…
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் “வாரிசு” படத்துடன் மோதுவதால் ரசிகர்கள் வெறித்தனமாக இத்திரைப்படங்களுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் “தளபதி 67” திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைய உள்ள செய்தியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இதனை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளிவந்தது.
அட்லி இதற்கு முன் விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படங்கள் மாபெறும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.
அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற தென்னிந்திய நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். “ஜவான்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவர உள்ளது.
“தளபதி 68” திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் “தளபதி 68” படக்குழு திரைப்படத்திற்காக போட்ட பிளான் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: அரசியலுக்கு ரெடியாகும் விஜய்… முக்கிய தலைவருடன் ரகசிய சந்திப்பு… கதை இப்படி போகுதா??
அதாவது 400 கோடி பட்ஜெட் என்பதால் இத்திரைப்படத்தை வியாபாரம் செய்ய ஷாருக்கானை இதில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் அட்லி ஈடுபட்டுள்ளாராம். மேலும் சன் பிக்சர்ஸ் உரிமையாளரான கலாநிதி மாறன்தான் அட்லியிடம் “தளபதி 68” திரைப்படத்தில் ஷாருக்கானை நடிக்க வைப்பதற்கான ஐடியாவை கூறினாராம். ஷாருக்கான் உள்ளே வந்தால் பேன் இந்தியா திரைப்படமாக இதனை வியாபாரம் செய்யலாம் என்பதுதான் திட்டமாம். இத்தகவலை மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.