ரஜினிகாந்த் ரொம்ப பிஸி!.. அட்லீயோட அடுத்த டார்கெட் யாரு தெரியுமா?.. இந்த காம்போ செமயா இருக்கே!..

ஷாருக்கானை வைத்த ஜவான் படத்தை இயக்கிய அட்லீ சுமார் ஒரு வருடமாக புதிதாக எந்த படத்துக்கும் ஆரம்பிக்காமல் அடுத்த படத்துக்கான ஹீரோவை தேடும் பணியிலேயே ஈடுபட்டு வருகிறார் என கூறுகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் அட்லீ அடுத்த படம் பண்ண போகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயை வைத்து படம் பண்ண முடியாத நிலையில், அல்லு அர்ஜுனை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம் கட்டுப்படியாகாத நிலையில் தற்போது ஹீரோவை மாற்ற வேண்டிய சூழலுக்கு அட்லீ தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: போன வேகத்தில் திரும்பி வந்த அஜித்!.. விடாமுயற்சி என்னாச்சி?!.. பரபர அப்டேட்!..

சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்தை வைத்து அட்லீ தனது அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஜினிகாந்த் அட்லீ படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அந்த அளவுக்கு அவர் கூலிப் படத்தில் பிசியாக போகிறார் என்கிற பதில் அட்லீக்கு வந்த நிலையில், தற்போது அடுத்ததாக ரஜினி லெவலுக்கு ஒரு ஹீரோவை தேடி வருகிறார் என்கின்றனர்.

கல்கி படத்தின் மூலம் உலக அளவில் கலக்கி வரும் கமல்ஹாசன் அடுத்து இந்தியன் 2 படத்தை வெளியிட உள்ள நிலையில், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அந்த புரமோஷனுக்கு அட்லீ சும்மா ஒன்றும் செல்லவில்லை என்றும் கமல்ஹாசனை சீக்கிரமே இயக்கப் போவதாக அந்த நிகழ்ச்சியிலேயே பேசிய அட்லீ தற்போது சல்மான்கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: எனக்கு அந்த நடிகரோட சம்பளம் வேணும்!.. மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய சிம்பு!. விளங்குன மாதிரிதான்!.

கமல்ஹாசன் வரிசையாக பல படங்கள் கைவசம் வைத்துள்ள நிலையில், அட்லீ படத்துக்கு எப்படி கால்ஷீட் ஒதுக்குவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கல்கி படத்துக்கே திடீரென கமல்ஹாசன் கால்ஷீட் ஒதுக்கி நடித்த நிலையில், அட்லீ படத்துக்கும் ஒதுக்க அவரால் முடியும் என்கின்றனர்.

 

Related Articles

Next Story