ஷங்கர் பட புரமோஷனுக்கு சீஃப் கெஸ்ட்டான அட்லீ!.. உலக நாயகன் பற்றி என்ன இப்படி சொல்லிட்டாரே!..

by Saranya M |   ( Updated:2024-06-26 01:57:32  )
ஷங்கர் பட புரமோஷனுக்கு சீஃப் கெஸ்ட்டான அட்லீ!.. உலக நாயகன் பற்றி என்ன இப்படி சொல்லிட்டாரே!..
X

இந்தியன் 2 படத்தின் புரமோஷன் நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் அட்லீ கலந்து கொண்டு தனது குருநாதர் ஷங்கர் பற்றியும் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது.

சிஷ்யன் படத்துக்கு குரு சீஃப் கெஸ்டாக போன காலம் எல்லாம் சென்று தற்போது குரு படத்துக்கு சிஷ்யன் புரமோஷன் செய்வதுதான் உண்மையான வளர்ச்சி என ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி இத சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்! என்கிட்ட போய் இப்படி? சிங்கம் புலி பகிர்ந்த ரகசியம்

ஷங்கர் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்தியன் தாத்தாவாக நடித்துள்ள கமல்ஹாசனின் புதிய கெட்டப் WWE வீரர் ஹல்க்ஹோகான் கெட்டப் போல உள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சாமி ஸ்கொயர் எனும் படத்தில் நான் சாமி இல்ல பூதம் என சியான் விக்ரமை வைத்தே அந்த படத்தை ஹரி காலி பண்ணது போல கமலை வைத்தே இந்தியன் படத்தை ஷங்கர் காலி பண்ணாமல் இருந்தால் சரி என ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பியுள்ளன.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு காப்பி ரைட்ஸ் மட்டும் மாதம் இவ்வளவு கோடி வருதா?!.. அடேங்கப்பா!..

டிரைலர் வெறித்தனமாக உள்ளது. நிச்சயம் இப்போதுள்ள ரசிகர்களை படம் கவரும் அதை டார்கெட் செய்து தான் ஷங்கர் எடுத்துள்ளார் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அட்லீ, தனது மகன் எதிர்காலத்தில் சினிமா பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கமல் சார் படங்களை தான் பார்க்க வைப்பேன்.

அவர்தான் சினிமாவின் பைபிள், என்சைக்லோபீடியா என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும், விரைவில் கமல் சாரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றும் அட்லீ பேசியுள்ளார். கமலை பைபிளாகவே அட்லீ மாற்றிவிட்டாரே என நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: 2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

Next Story