Connect with us

இது உனக்கு தேவையா….? தெரியாம வந்து விழுந்துட்டேன்….! தப்பிக்க வழியை தேடும் அட்லீ….!

atlee_main_cine

Cinema News

இது உனக்கு தேவையா….? தெரியாம வந்து விழுந்துட்டேன்….! தப்பிக்க வழியை தேடும் அட்லீ….!

ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லீ. சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.

atlee1_cine

தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே தடம் பதித்தார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயை வைத்து தெறி, பிகில், மெர்சல் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

atlee2_cine

மேலும் விஜயை எந்த மாதிரி ஸ்கீரினில் காண்பித்தால் மக்களுக்குப் பிடிக்கும் என்பதை அட்லீ நன்கு தெரிந்தவர். அதனால் தான் பீஸ்ட் படத்தின் தோல்வியை அடுத்து அட்லீயின் பெயர் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவி வந்தது. அதாவது நெல்சன் ரஜினி கூட்டணிக்கு பதிலாக அட்லீ ரஜினி என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் அட்லீ அந்த சமயம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் உடன் சேர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார்.

atlee3_cine

இந்த நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து ஓரளவு படம் ரிலீஸ் ஆகிற நிலைமையில் ஷாரூக்கான் படத்தை பார்த்து சில காட்சிகள் சரியாக அமையவில்லை. மறுபடியும் ரீடேக் போகலாம் என்று கூறியுள்ளாராம். அப்பாடா…! ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம், தமிழ் சினிமாவிலயும் கொஞ்சம் கவனம் செலுத்தவும் என்று இருந்தவருக்கு ஷாரூக்கான் இப்படி கூறியது கொஞ்சம் மனவருத்தத்தை தான் தந்திருக்கும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top