Categories: Cinema News latest news

அண்ணா விஜய் அரசியலுக்கு போயிட்டாரு!.. அடுத்து ஹாலிவுட் தான்!.. அட்லீ எடுத்த அதிரடி முடிவு!..

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானாவர் அட்லீ. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே நண்பன் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக விஜய்க்கு அட்லீ தெறி படத்தின் கதையை சொல்ல உடனடியாக நடிக்க ஓகே சொல்லி அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்தார்.

அட்லீயை நம்பி விஜய் படம் கொடுத்த நிலையில், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய இயக்குநராக தமிழ் சினிமாவில் மாறினார் அட்லீ. தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கினார்.

இதையும் படிங்க: கார்த்தி 27 பட பூஜை!.. சிவகுமார் முதல் சூர்யா வரை யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க!..

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேட்ச்சை பார்க்க வந்த ஷாருக்கானை அட்லீ சந்தித்த நிலையில், ஷாருக்கான் பாலிவுட்டுக்கு அட்லீயை வர வைத்து விட்டார். பல ஆண்டுகால போராட்டத்திற்கு பலனாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜவான் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

ஆரம்பத்தில் அந்த படத்திற்கு சங்கி என பெயர் வைத்திருப்பதாக எல்லாம் வதந்திகள் கிளம்பின. ஆனால், ஜவான் என அட்டகாசமாக டைட்டில் வைத்து நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு என தென்னிந்திய நடிகர்களை இறக்கி அட்டகாசமான ஒரு இண்டஸ்ட்ரி ஹிட்டை பாலிவுட்டுக்கு கோலிவுட்டில் இருந்து சென்ற அட்லீ கொடுத்தார்.

இதையும் படிங்க: ரீரிலிஸ் பரிதாபங்கள்!.. சினிமா தியேட்டர இப்படி K Tv மாதிரி ஆக்கி விட்டுடீங்களேயா!.. ரசிகர்கள் கலாய்!

அடுத்து ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படத்திற்கு கதை செய்து வருகிறேன் என்றார் அட்லீ. ஆனால், திடீரென விஜய் அரசியலுக்கு வர முடிவெடுத்த நிலையில், இனிமேல் விஜய் அண்ணாவை இயக்க முடியாது என நினைத்த அட்லீ இன்னும் 3 ஆண்டுகளில் ஹாலிவுட்டில் படம் பண்ணுவேன் என்றும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Published by
Saranya M