அட்லிக்கு அல்வா கொடுத்த ஷாருக்கான்... கடுப்பில் பதிவுபோட்ட அட்லி...

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது கெரியரை தொடங்கியவர் தான் இயக்குனர் அட்லி. முதல் படம் வெற்றி பெற்றாலும் பல விமர்சனங்களை சந்தித்தது. மெளனராகம் படத்தின் காப்பி தான் ராஜா ராணி படம் என பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அட்லி தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக தளபதி விஜயை வைத்து அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நிலையில் அட்லிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

nayanthara
இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமான நிலையில் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் வெளிநாட்டிற்கு சென்றனர். அந்த சமயம் பார்த்து ஷாருக்கானின் மகன் போதை வழக்கில் கைதானதால் மீண்டும் நாடு திரும்பிய ஷாருக்கான் தற்போது வரை படப்பிடிப்பு குறித்த முடிவிற்கு வரவில்லையாம்.
இதற்கிடையில் இதுவரை அட்லி இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு படத்தின் காப்பி என தயாரிப்பாளர் சங்கத்தில் அட்லி மீது புகார் வந்துள்ளது. மேலும் காப்பி படங்கள் காரணமாகவே விஜய் அட்லி கூட்டணி முறிந்ததாகவும் கூறப்பட்டதால், ஷாருக்கானுக்கு அட்லி மீது முழு நம்பிக்கை வரவில்லையாம்.

vijay-atlee
இதனால் தான் படப்பிடிப்பிற்கு வராமல் தாமதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாருக்கானின் இந்த செயலால் கடுப்பான அட்லி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்கள் வாழ்க்கையில் வரும். என்னை நம்பு அது கண்டிப்பாக வரும்" என
குறிப்பிட்டுள்ளார்.