
Cinema News
தளபதியின் அடுத்த செய்கை ‘ராயப்பன்’ தான்.! அடித்து கூறிய அட்லீ.! இதுதான் ஹாட் நியூஸ்..,
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ என இந்த வெற்றி கூட்டணிக்கு மேலும் பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து, பிகில், மைக்கேல், ராயப்பன் என மூன்றுவிதமாக விஜய் நடித்து இருப்பார். இதில் மற்ற எந்த காட்சிகள் வேண்டுமானால், ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கலாம். ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் விஜய் ரசிகர்கள் தாண்டி, அனைத்து தரப்பினரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
அந்த ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து கொண்டு முழு நீள ஒரு திரைப்படம் எடுங்க என அட்லீயிடம் பலரும் கேட்டுள்ளனர். அதே போல தான் நேற்று அமேசான் OTT தளமும் தனது டிவிட்டர் பக்கத்தில் ராயப்பன் கதாபாத்திரம் முழுநீள படமாக வந்தால் எப்படி இருக்கும் என கேட்டிருந்தனர்.
இதையும் படியுங்களேன் – படுக்கை அறையில் லிப்-லாக் முத்தம்.! போட்டோ ரிலீஸ் செய்து புலம்ப வைத்த ரைசா.!
இதனை பார்த்த அட்லீ, ராயப்பன் பாணியில் ‘செஞ்சிட்டா போச்சி’ என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி விட்டனர். அந்த படம் எப்போது வருமோ என காத்திருக்க தொடங்கிவிட்டனர்.
விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்ததாக 67வது திரைப்படத்தை இயக்க லோகேஷ் காத்திருக்கிறார். அதற்கு அடுத்து வேண்டுமானால் அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Senjittaaaaa pochuuuuu….. https://t.co/sfIxMt3RZb
— atlee (@Atlee_dir) May 24, 2022