காத்திருக்கும் நெல்சன்!.. குறுக்கே கெளஷிக்கா உள்ளே நுழையும் அட்லீ!.. கூலிக்கு அடுத்து பெரிய சம்பவம்?

by Saranya M |   ( Updated:2024-06-24 10:26:33  )
காத்திருக்கும் நெல்சன்!.. குறுக்கே கெளஷிக்கா உள்ளே நுழையும் அட்லீ!.. கூலிக்கு அடுத்து பெரிய சம்பவம்?
X

நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் படம் இயக்கிய நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். அதே பாணியை லோகேஷ் கனகராஜும் லியோ தொடர்ந்து கூலி படத்தை இயக்கி உள்ளார்.

ஆனால், நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு முன்னதாக விஜய் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவில்லை. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட படங்களில் அட்லி உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இதையும் படிங்க: ஒரே குடியிருப்பில் விஜய், த்ரிஷா! அந்த போட்டோவுக்கு பின்னனியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

விஜயை வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கிய அட்லி ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1100 கோடி வசூலை சாத்தியம் ஆக்கினார்.

அட்லியின் குருநாதர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் கூட இதுவரை அந்த அளவுக்கு வசூல் பெறவில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்க உள்ள படத்தில் சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: எல்லாம் போச்சே!.. பெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!.. கைவிட்ட திரையுலகம்!..

இது மட்டும் உறுதியானால் இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட படமாக அந்த படம் உருவாகும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே அட்லி மற்றும் சல்மான்கான் படம் பண்ணுவது உறுதியான நிலையில், ரஜினிகாந்த்தும் அந்த படத்தில் இணையபோவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்க காத்துக் கொண்டிருக்கும் நெல்சனுக்கு ஆப்படிக்கும் விதமாக அட்லி உள்ளே புகுந்து விட்டார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் இந்த படத்தில் டபுள் ஹீரோவாக பண்ணப் போகிறாரா? அல்லது கேமியோவா என்பதும் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜயை பத்தி கேள்விப்பட்டது பொய்! பத்துக்கு பத்து ரூம்ல? உயிர் நண்பனா இப்படி சொல்றது?

Next Story