வெடியா இருக்கப் போது.. அஜித்துக்காக ஸ்கிரிப்டோடு காத்திருக்கும் அட்லீ! இது எப்போ நடந்துச்சு?

atlee
Ajith:அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது. இதுவரை படம் 175 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது வாரத்தின் முடிவில்தான் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என சொல்ல முடியும் என தெரிவிக்கிறார்கள் .திங்கள் கிழமை படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் படம் கண்டிப்பாக 250 லிருந்து 300 கோடி வரை தாராளமாக வசூலிக்கும் என கோடம்பாக்கத்தில் நம்பத் தகுந்த சிலர் கூறியிருக்கிறார்கள் .அஜித் கேரியரிலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்த படமாக மாறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதுவரை சென்டிமென்ட், ஆக்சன் போன்ற திரைப்படங்களிலேயே நடித்து வந்த அஜித் முதன் முறையாக ரசிகர்களுக்கான ஒரு படம் என்ற வகையில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
அதைத்தான் ரசிகர்களும் விரும்புகின்றனர். அதனால்தான் இந்த படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது .இப்போது அவர் கார் ரேஸில் பிஸியாக இருப்பதினால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவரின் அடுத்த இயக்குனர் யார் என்பது தெரியவரும்.
அதுவரை அவருடைய லிஸ்டில் விஷ்ணுவர்தன், தனுஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ,தெலுங்கு இயக்குனர் என வரிசையாக இருக்கின்றனர். இதில் இயக்குனர் அட்லியும் அடங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .ஏனெனில் அஜித்தை பற்றி அட்லி கூறிய ஒரு தகவல் தற்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே இது பழைய பேட்டியில் கூறியது தான் .

ஆரம்பம் திரைப்படத்தின் போது ராஜா ராணி படத்திற்காக நயன்தாராவுடன் அவ்வப்போது டிஸ்கசனுக்கு செல்வாராம் அட்லி. அப்போது அஜித்திடம் நயன்தாரா அட்லியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பார்த்தவுடனேயே ‘இப்பதான் ஸ்கூல் முடித்துவிட்டு வருகிறாயா’ என கிண்டலாக கேட்டாராம் அஜித். இருந்தாலும் நல்லா பண்ணுங்க என சொன்னாராம் .
அஜித்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அவரை தொடர்பு கொள்ள பலமுறை சுரேஷ் சந்திரா மூலம் முயற்சி செய்தேன். ஆனால் சில பல காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் நானும் அஜித்தும் இணைந்தால் அது ஒரு பெரிய வெடியாக இருக்கும். அவர் மட்டும் எஸ் என்று சொன்னால் ஸ்கிரிப்ட்டோடு போய் நின்று விடுவேன் என அட்லி கூறி இருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரம் அந்த ஒரு மேஜிக்கும் நடக்கும்.