மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!

Atlee: கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை சினிமா இயக்குனர்கள் ஒரு புதிய ட்ரெண்ட்டினை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு படத்தினை எடுத்து விட்டால் போதும் உடனே ஆஸ்கார் கிடைத்து விடும் என டயலாக் பேசி விடுகின்றனர். இதையே தற்போது சில முன்னணி இயக்குனர்களும் செய்வது தான் ஆச்சரிய விஷயமாகி இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸான ஜவான் படத்தின் வசூல் முதல் வாரம் பட்டைய கிளப்பிய நிலையில் அடுத்த சில நாட்களிலே வசூல் அதள பாதாளத்துக்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: கலாநிதி மாறன் கொடுத்த கவரில் இருந்தது இத்தனை கோடியா!.. அடேங்கப்பா தலையே சுத்துது!…

நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஜவான். இப்படம் கடந்த 7ந் தேதி ரிலீஸாகியது. ஜவான் வசூல் 500 கோடியை வெகு சீக்கிரமாக நெருங்கியது. ஜவான் திரைப்படம் அப்பட்டமாக டாப் தமிழ் படங்களின் காப்பி தான் என தொடர்ச்சியாக விமர்சனம் வந்தது.

ஒரு பக்கம் அட்லீ தன்னுடைய அடுத்த பட வேளைகளில் பிஸியாகி விட்டார். அவரை தட்டி தூக்க பல மொழியின் முன்னணி நாயகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கதை கேட்டு வருகின்றனர். ஆனால் அட்லீ சில மாதங்கள் ரெஸ்ட் முடித்து விட்டு தான் அடுத்த படத்தினை தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..

சமீபத்தில் வெற்றிவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் அட்லீ, ஷாருக்கான், தீபிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்திய பேட்டியில் பேசிய அட்லீ ஜவான் படத்தினை ஆஸ்கார் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எல்லா கலைஞர்களை போல எனக்கும் ஜவானை ஆஸ்கார் எடுத்து செல்ல ஆசை இருக்கிறது.

இதனை ஷாருக்கானிடம் கேட்பேன். இந்திய தேர்வுக்குழு அனுப்பாவிட்டாலும் ஆர்ஆர்ஆர் படத்தினை போல நாங்களே அப்ளே செய்து கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அந்த மஞ்சள் வீரன் டைரக்டரும் இந்த நம்பிக்கையில் தான் இருக்கிறாரா!

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it