ஜவான் படம் இந்த படத்தின் காப்பியா? அட்லீ மீது பாய்ந்த வழக்கு... என்னங்க ஜி அங்கையுமா?

ஜவான்
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் அட்லீ மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை கோலிவுட்டில் இல்லை பாலிவுட்டில் அவர் இயக்கும் ஜவான் படத்தின் மீது என்பது தான் இந்த பிரச்சனை மேலும் பரவ காரணமாக இருக்கிறது.

atlee srk
அட்லீ இயக்குனராக அறிமுகமான படம் ராஜா ராணி. ஆர்யா, ஜெய், நயன் மற்றும் நஸ்ரியா முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. ஒரு பக்கம் அட்லீ காப்பி கேட் என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். ராஜா ராணி படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்றனர். இருந்தும் படம் நல்ல வசூலை பெற்றது. அட்லீக்கும் இயக்குனராக அப்ளாஸ் கிடைத்தது.
இந்த வெற்றியுடன் அவர் சென்றது விஜயிடம் தான். மெர்சல் படத்தின் மூலம் இந்த காம்போ இணைந்தது. இப்படத்திலும் அவரை காப்பி கேட் என்றே விமர்சித்தனர். ஆனால் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக தெறி, பிகில் என இருவரும் இணைந்து படங்களை செய்தனர். இந்த கோலிவுட் வெற்றிகள் மூலம் அட்லீ தற்போது பாலிவுட்டில் ஒரு படம் செய்து வருகிறார். ஷாருக்கான் நடிக்கும் அப்படத்திற்கு ஜவான் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்திற்கும் அவரின் அதே காப்பி கதை சர்ச்சை உருவாகி இருக்கிறது.

perarasu
ஜவான் படத்தின் கதை கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான பேரரசு கதை தான் என அவர்மீது பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இப்புகாரின் மீதான விசாரணை 9ந் தேதிக்கு மேல் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.