சிலைனுதானே நினைச்சிங்க..! நல்லா உத்து பாத்தாதான் தெரியுது..
ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் தான் இயக்குனர் அட்லீ. சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.
தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே தடம் பதித்தார். முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது படமான தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.மூன்றாவது படமான மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்,என அட்லீயின் அசுர வளர்ச்சி வியப்புக்குரியது.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தற்போது அட்லி இந்தியில் ஷாரூக்கானை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் சீரீயலில் தொடங்கி சினிமாவில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இருந்தாலும் அட்லிக்கு ஒரு முழு பலமாக இருந்துவருகிறார். இதை அட்லீயே பல மேடைகளில் சொல்வதுண்டு. தன்னுடைய வேலை போக அட்லீ மீதி நேரத்தை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக கழித்துவருகிறார்.
இந்த நிலையில் இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது பிரியா அவர்கள் சிலை போன்று நிற்கும் போட்டோவை அதில் வெளியிட்டுள்ளார்.