நம்பி வந்து நடித்த மூன்று நடிகைகள்.. ஒரு ஹீரோ.. ஏமாற்றிய சுந்தர்சி
சுந்தர் சி எடுக்கும் படங்களில் குறைந்தது இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள் . குறிப்பாக அரண்மனை சீரியஸ் படங்களில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள். முதல் இரண்டு பாகமும் அப்படித்தான் இருந்தது. முதல்பாகம் சூப்பராக இருந்தது . இரண்டாம் பாகம் ஓரளவு சுமாராக இருந்தது . ஆனால் மூன்றாம் பாகமான அரண்மனை 3 படு மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். ரசிகர்களின் பார்வை தான் இப்படி என்றால் சினிமா விமர்சனங்களை பார்த்தால் பிரபல ஊடகங்களிலும் இப்படித்தான் இருக்கிறது .
சுந்தர் சி தன்னை நம்பி நடித்த மூன்று நடிகைகள் ஒரு ஹீரோவை முழுமையாக ஏமாற்றி விட்டார் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். இனி பேய் கதைகள் விட்டுவிட்டு வேறு ஏதாவது கதை பக்கம் போகலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர் . விவேக் , மூன்று ஹீரோயின்கள் , ஆர்யா, யோகி பாபு யாருடைய காட்சியுமே மனதில் ஒட்டவில்லை .
அதேநேரம் மிக மோசமான காட்சி அமைப்போ , கிளாமரான விஷயங்களோ படத்தில் இல்லை என்பது ஆறுதலான விஷயம். அரண்மனை திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை சிரிக்கவைக்க வேண்டும் என்று மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் பெரியவர்களை துன்புறுத்தி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை .