அர்ஜூன் படத்தை பார்த்து பாதியிலேயே தியேட்டரை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்… ஏன் தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-04-14 11:35:14  )
Arjun
X

Arjun

1985 ஆம் ஆண்டு அர்ஜூன், நளினி, ஜெய்சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “யார்?”. இத்திரைப்படத்தை சக்தி-கண்ணன் ஆகியோர் இயக்கியிருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

8 கிரகங்கள் ஒன்றாக சேரும்போது ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை தீய சக்தியின் வடிவமாக இருக்கிறது. அந்த குழந்தை வளர வளர சமுதாயத்தில் பல தீமைகள் நடக்கின்றன. இதனை தடுக்க ஒரு முனிவரால்தான் முடியும். அந்த முனிவர் தீய சக்தியை அழித்தாரா இல்லையா என்பதே இத்திரைப்படத்தின் கதை.

“யார்?” திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகவும் பயங்கரமாக திகில் திரைப்படமாக பார்க்கப்பட்டது. அக்காலகட்டத்தில் பிறந்தவர்கள் பலரும் அத்திரைப்படத்தை பார்த்து இரவில் தூக்கம் கெட்டுப்போய் அலைந்தார்களாம். அந்தளவுக்கு அத்திரைப்படம் திகிலை ஊட்டியதாம். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

அதாவது “யார்?” திரைப்படம் வெளிவந்த முதல் நாள் சென்னையில் சில திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் பலரும் இது பேய் படம் என்று பயந்துபோய் பாதியிலேயே வெளியே வந்துவிட்டார்களாம். இதனை பார்த்த கலைப்புலி எஸ்.தாணு அன்று மாலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாக இருந்த “ஒலியும் ஒளியும்” நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் கடைசி பாடலான “அபிராமியே” என்ற சாமி பாடலை ஒளிபரப்பச்சொன்னாராம். அதன் பிறகுதான் இது சாமி திரைப்படம் என்று மக்கள் இந்த படத்தை பார்க்க வந்தார்களாம்.

Next Story