Connect with us

Cinema News

ஆடியோ கேசட்டில் வித்தியாசம் காட்டிய படங்கள்

அந்தக்கால சினிமாக்கள் ரிலீஸ் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பாடல் கேசட்டுகள் ரிலீஸ் ஆகி விடும். அந்த பாடலை கேட்டு கேட்டு குதூகலித்து, கேசட்டின் ஏ சைடு, பி சைடு இரண்டு சைடும் கேட்கிறேன் என தேய் தேய் என்று அந்த படத்தின் பாடலை கேட்டு தேய்த்து விடுவர்.

 

அதன் பிறகே படம் ரிலீஸ் ஆகும் சமயம் படத்தோடு சேர்த்து அந்த பாடல்களை கேட்பது பரவசமாய் இருக்கும். தற்போது வருவது போல் ஒரு சிங்கிள் ரெண்டு சிங்கிள் லிரிக்ஸ் வீடியோ என்று ஒவ்வொன்றாய் விளம்பரத்துக்காக வெளியிட்டு மொக்கை போட மாட்டார்கள் அப்போது.

சில படங்களின் கேசட்டுகள் வித்யாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முதல் மரியாதை பட கேசட்டும் ஒன்று. முதல் மரியாதை படத்தின் பாடல்கள் இளையராஜா இசையில் பெரிய ஹிட் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ஒரிஜினல் கேசட் மற்றும் எல் பி ரெக்கார்டுகளில் இப்படத்தின் இயக்குனர் பாரதிராஜாவும், பாடலாசிரியர் வைரமுத்துவும் ஒரு பாடலுக்கு முன்பு பாடலை பற்றியும் அப்பாடலின் சூழ்நிலைபற்றியும் பேசுவர் இவர்கள் இருவரும் பேசி பேசி வந்த பாடல் கேசட் மிகவும் பிரபலமானது.

இதே போல் ரஜினிகாந்த் நடித்த மாவீரன் படத்திலும் இளையராஜா இசையமைத்தார் இந்த படத்தின் பாடல்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசி பேசி ஒவ்வொரு பாடலும் வருவது போல கேசட்டில் இருக்கும். ஒரு சாதாரண நடிகனாக இருந்த நான் இன்று என் சொந்த படமான மாவீரன் என்ற படத்தை வழங்கும் அளவுக்கு என்னை பெரிய தயாரிப்பாளர் ஆக்கிய தமிழக மக்களுக்கு நன்றி என ரஜினி பேசி இருப்பார். இந்த படத்தின் பாடல்களும் கூடவே ஒவ்வொரு பாட்டுக்கு நடுவிலும் தங்களது தலைவர் ரஜினியும் பேசி இருந்ததால் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்தனர். ஆனால் மாவீரன் படம்தான் தோல்வி அடைந்தது பாடல்கள் செம ஹிட்.

இது போல இளையராஜா இசையில் வந்த ப்ரண்ட்ஸ் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நடிகர் விஜய் அப்பாடல் மற்றும் படம் பற்றி பேசுவது போலவும் கேசட்டுகள் வந்தது. ப்ரண்ட்ஸ் படத்தின் பாடல்களும் விற்பனையில் சக்கை போடு போட்டது. அந்த படம் வந்த 2000மாவது வருட நேரத்தில் கேசட்டுகளுக்கு முடிவு காலம் நெருங்கி சிடிக்களின் காலம் வந்து கொண்டிருந்தது.

இது போல் 2002ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படத்தை சொல்லலாம். இந்த படத்தின் விளம்பரத்துக்காக பாபா படத்தின் கேசட்டுகளை முன்பதிவு செய்து வாங்கலாம் அப்படி முன்பதிவு செய்து வாங்குபவர்களுக்கு பாபா படத்தின் டிக்கெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என சொன்னதால் பாபா படத்தின் கேசட்டை முன்பதிவு செய்தனர். அதுவும் பாபா எந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அங்குதான் முன்பதிவு செய்து வாங்க வேண்டும் என்று இருந்தது.

இது போல் ஆபாவாணன் தயாரிப்பில் வந்த கருப்பு ரோஜா படத்தின் ஒரிஜினல் கேசட்டுகளில் ரோஜாப்பூவின் நறுமணம் வருவது போல வைத்திருந்தனர். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. பலரும் ரோஜாப்பூ வாடை வருகிறதா என வாங்கி முகர்ந்து பார்த்துக்கொண்டனர்.

2003ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்த லேசா லேசா படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா படத்தில் வித்தியாச முயற்சியாக லேசா லேசா என்ற பாட்டை மட்டும் பதிவு செய்து வெறும் 9 ரூபாக்கு விற்றனர். மிக குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்த முதல் கேசட் இதுவாகத்தான் இருக்கும்.

பாடல்களுக்காக மட்டுமின்றி பின்னணி இசைக்காகவும் சில கேசட்டுகள் வெளியிடப்பட்டன அதில் முக்கியமானது மனோபாலா இயக்கத்தில் வெளியான பிள்ளை நிலா படத்தின் பின்னணி இசை மட்டும் கேசட்டாக வெளியிடப்பட்டதாக சொல்வதுண்டு. அதே போல் மிஷ்கின் இயக்கத்தில் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் இளையராஜா அமைத்த பின்னணி இசையை மிஷ்கின் ஆடியோவாக வெளியிட்டார்.

இப்படியாக பாடல் கேசட்டுகளை உண்மையிலேயே ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் விரும்பி வாங்கியதால். பாட்டு ரசிகர்களை கவர்வதற்காக இப்படியான பரிட்சார்த்த வித்தியாசமான முயற்சிகளை கையாண்டனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top