சிவா
-
தனுஷ் படத்த விட அதிகம்!.. இமேஜுக்காக பராசக்தியை பில்டப் செய்த SK ஃபேன்ஸ்!..
சினிமா என்பது போட்டி பொறாமை கொண்ட உலகம். ஒரு நடிகர் மேலே வளர்ந்து விடக்கூடாது என இன்னொரு நடிகர் நினைப்பார். ஆனால் தற்போது இது கொஞ்சம் மாறியிருக்கிறது. அதேநேரம் ரசிகர்களிடம் போட்டி பொறாமை மற்றும் வன்மமும் மிகவும் அதிகரித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் ட்ரோல் செய்வதை பார்த்தால் இது புரியும்.ரஜினி, அஜித் படங்கள் வெளியானால் விஜய் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்வார்கள். அதேபோல் விஜய் படம் வெளியானால் அஜித், ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். இது எப்போது…
-
முதல் படத்திலேயே தட்டி தூக்கிய ஜேசன்!.. அடுத்த படம் கிடைச்சாச்சி!…
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படமும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் அவர் இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சம்பத், நடன இயக்குனர் ராஜி சுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல நடிகராகத்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து படமெடுக்க திரையுலகில் உள்ள பலரும் முயற்சியும் செய்தார்கள்.…
-
எனக்கு நடிக்க தெரியாதா?!.. அந்த படத்துல நடந்தது எனக்கு வருத்தம்!.. விஜய் சேதுபதி ஃபீலிங்!…
குறும்படங்களில் நடித்த அப்படியே சினிமாவில் நடிக்க வந்தவர்தான் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதியை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. வித்தியாசமான கதைகள், அதில் இயல்பான நடிப்பு என கவனம் ஈர்த்தார் விஜய் சேதுபதி. முக்கியமாக ஹீரோ இமேஜுக்குள் சிக்காமல் இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வழக்கமான நடிகர்கள் போல பந்தா பண்ணுவது,…
-
லோகேஷுக்கு அல்வா!.. 1000 கோடி பட்ஜெட்!.. அவருடன் இணையும் அல்லு அர்ஜூன்?!.
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். ஒருபக்கம், தெலுங்கில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் த்ரி விக்ரம். இவரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து உருவான அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படமும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து இரண்டு பாகங்களாக வெளிவந்த புஷ்பா மற்றும்…
-
Kombuseevi: வசூலில் பட்டைய கிளம்பும் கொம்பு சீவி!.. 4 நாள் வசூல் அப்டேட்!..
10 வருடங்களுக்கு முன்பே சகாப்தம் என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முக பாண்டியன். புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் இவர். மூத்த மகன் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இளைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.சகாப்தம் திரைப்படத்திற்கு பின் மதுர வீரன் படைத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பாத வெற்றியை பெறவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம்…
-
ரஜினியுடன் இணைத்து கிசுகிசு வந்ததன் பின்னணி!.. லதா சொல்லும் பிளாஷ்பேக்…
தமிழ் சினிமாவில் அப்போதும் இப்போதும் எப்போதும் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாலச்சந்தரின் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி அதன்பின் கமல் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி உச்சத்தை தொட்டவர்தான் ரஜினிகாந்த். தனக்கென ஒரு தனி ஸ்டைல், தனி பாணியை உருவாக்கி ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையும் ரஜினி உருவாக்கி இருக்கிறார். ரஜினி சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 75…
-
2025-ல் ரிலீஸான 5 சிறந்த திரைப்படங்கள்!.. ரசிகர்கள் கொண்டாடிய பைசன்!..
தமிழ் சினிமாவை பொருத்தவரை 2025ம் வருடம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானது. இந்த வருடங்கள் சில பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது. 2025 ஆம் வருடம் லாபகரமாக அமையவில்லை என விநியோகஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருக்கிறார். வழக்கம் போல இந்த வருடமும் மிகவும் குறைவான நல்ல படங்களே வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் 2025ம் வருடம் நல்ல கதை அம்சத்தோடு உருவாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம் அறிமுக இயக்குனர்…
-
ஜனநாயகனோடு போட்டி!.. பராசக்திக்கு ஏழரையை இழுத்துவிட்டாங்க!.. சோலி முடின்ச்!…
விஜயின் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 14ம் தேதி வெளியாவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சில காரணங்களுக்காக பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பராசக்தி பட தயாரிப்பாளர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் மற்றும் உறவினர் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கக் கூடாது என்பதனாலேயே வேண்டுமென்று இப்படி செய்திருக்கிறார்கள் என சிலர் பேச துவங்கினார்கள். ஈரோட்டில் விஜய் பேசிய பேச்சே…
-
Sigma: ஜேசன் சஞ்சய் சும்மா மிரட்டுறாரே!… எப்படி இருக்கு சிக்மா டீசர் வீடியோ?!..
ரசிகர்களால் தளபதி என்ன கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கி எல்லோருக்கும் டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஜேசன். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜோசப் சஞ்சய் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. சுயம்புவாக சினிமாவை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் சிக்மாவின் டீசர் வீடியோ…










