ஆட்டோ சங்கரின் விபச்சார லிஸ்டில் பல முன்னணி நடிகைகள் - திடுக்கிட வைக்கும் தகவல்!
ஆட்டோ சங்கர்... இந்த பெயரை யாரேனும் உச்சரித்து கேட்டாலே ஈரக்கொலை நடுங்கும் அளவுக்கு மக்கள் பயந்து ஓடிய காலங்கள் உண்டு. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் மக்களை கொத்து கொத்தாக வித்தியாசமான முறையில் கொலை செய்து மக்கள் நடமாடும் இடத்திலேயே புதைத்து சிமெண்ட் போட்டு பூசி மூடிவிடுவாராம்.
எண்ணற்ற கொலைகளை செய்த இவர் கெட்டுபோனதற்கு முக்கிய காரணமே சினிமா துறை தான் என செய்திகள் வெளியானது. ஆம், அன்றைய டாப் நடிகைகளை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கிய ஆட்டோ சங்கர் அதற்கு ஒத்துழைக்காத பெண்களை அங்கேயே வெட்டிக் கொன்று புதைத்ததாக சம்பவங்கள் கூறுகிறது.
கிட்டத்தட்ட பெரிய அரசியல் புள்ளிகள் கேட்கும் பெண்களை வற்புறுத்தி அழைத்து வந்து பேரம் பேசி பணம் வாங்கி பிழைக்கும் மாமா வேலையை ஆட்டோ ஷங்கர் செய்துவந்துள்ளார். சீரியல் கில்லர் ஆன இவர் மிக குறுகிய காலத்தில் வளர்ந்து பல கொலைகள் செய்து தூக்கு தண்டனை பெற்றார். இந்நிலையில் ஆட்டோ சங்கரின் விபச்சார தொழிலில் பல முன்னணி நடிகைகள் சிக்கி சீரழிந்ததாக மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜு பேட்டி ஒன்றில் நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.