BharathiRaja: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கு அத்தனை எளிதாக ஒரு இடம் கிடைத்துவிடுவது இல்லை. அவர்கள் சரியான வாய்ப்பை பிடித்து போராடியே மேலே ஏறி வருகின்றனர். ஆனால் ஒரு நடிகருக்கு எளிதாக கிடைத்த வாய்ப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழில் 50 படங்களுக்கு மேலா ஹீரோவா நடிச்சவர். ஆனால், முதல் படத்தின் ஷூட்டிங்கின் போது டைரக்டரைத் தவிர புரடியூஸர், படக்குழு என யாருமே இவரை ஹீரோவாவே ஒப்புக்கொள்ளவே இல்லையாம். ஒருக்கட்டத்தில் அந்த ஹீரோ நடிப்பில் கடுப்பான படக்குழு இதை இயக்குனரிடமே சொல்லிவிட்டனர். அதை கேட்டு கடுப்பான இயக்குனர், படப்பிடிப்பை நிறுத்திடுறேன். இந்த ஹீரோவை துரத்திவிடுறேன்.
இதையும் படிங்க: ஒரு சைக்கோவ முடிச்சி விட்டாச்சு… அடுத்த சைக்கோ ஆட்டத்தை க்ளோஸ் பண்ண போறாங்களோ?
நீங்க ஜெமினி கணேசன் மாதிரி ஒரு ஹீரோவைக் கூட்டிட்டு வர்றீங்களா எனக் கடுப்படித்து இருக்கிறார். இதை கேட்ட படக்குழு ஜெர்க் ஆகி வாயை மூடிக்கொண்டனராம். அந்த ஹீரோ வேறு யாருமில்லை மண்வாசனை படத்தில் நடித்த பாண்டியன் தான். நண்பர் ஒருவருக்காக படம் எடுக்க ஓகே சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. மண்வாசனை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் ரெடி பண்ணி விட்டார்.
ஆனால் ஹீரோ கிடைக்காமல் இழுத்து கொண்டு இருந்ததாம். படப்பிடிப்பையும் தொடங்கணும் என்ற குழப்பத்தில் இருந்தவர். ஒருநாள் மதுரையில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு இவரிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தவர் தான் பாண்டியன். அவரை பார்த்த உடனே ஏதோ தோன்ற கையோடு தன்னோட ரூமுக்குக் கூட்டி போய்விடுகிறார்.
அங்கு சில டெஸ்ட்களை வைத்து பிடித்துவிட நாளைக்கு ஷூட்டிங்கு வந்துடு எனக் கிளம்பிவிட்டாராம். அப்படி உருவானது தான் மண்வாசனை திரைப்படம். பாண்டியனை எப்போதுமே அடுத்த ரஜினி என்று பாராட்டுவது தான் பாரதிராஜாவின் பழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நக்மாவையும் மிஞ்சிய ஜோதிகாவின் இன்னொரு அக்கா.. அட இந்தப் பட ஹீரோயினா?
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…