“உனக்கு நடிக்க வராதா!! யூ ஆர் செலக்டட்”… ஏ.வி.எம். செய்த துணிகர காரியம்… டாப் நடிகையின் சுவாரஸ்ய கதை…
ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். கமல்ஹாசன், வைஜேந்திமாலா போன்ற பல டாப் நடிகர்களை இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பல நடிகர்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடிப்பே வராத ஒரு பெண்ணை, பின்னாளில் டாப் நடிகையாக்கிய சுவாரஸ்ய கதையை இப்போது பார்க்கலாம்.
ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவில் கோலோச்ச தொடங்கிய காலத்தில், தனது நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்க புதுமுக நடிகர்கள் தேவை என்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தனர். அந்த விளம்பரத்தை பார்த்து ஒரு பெண் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். அதன் பின் அந்த பெண்ணிற்கு, சென்னைக்கு வந்து ஏவிஎம்மை பார்க்கவும் என பதில் கடிதம் ஒன்று வந்தது.
அதன் படி அந்த பெண், சென்னைக்குச் சென்று ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை நேரில் பார்த்துள்ளார். அப்போது அப்பெண்ணை பார்த்த ஏ.வி.எம். “உனக்கு பாடத்தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண் “எனக்கு தெரியாதுங்க” என பதில் கூறியுள்ளார்.
“நடனமாவது ஆடத்தெரியுமா?” என ஏவிஎம் கேட்டார். அதற்கு அந்த பெண் “எனக்கு நடனமும் தெரியாது” என கூறியுள்ளார். ஆனால் மெய்யப்பச் செட்டியார் அந்த பெண்ணை நிராகரிக்கவில்லை. அந்த பெண்ணிடம் அவர் “உன்னிடம் ஏதோ திறமை ஒளிந்துகொண்டிருக்கிறது என எனக்கு தோன்றுகிறது. நடனம், பாடல் என எல்லாவற்றையும் உனக்கு இங்கு இருப்பவர்கள் கற்றுக்கொடுப்பார்கள். நீ அனைத்தையும் கற்கும் வரை மாதச் சம்பளத்தில் இங்கே பணிபுரியலாம்” என கூறினாராம்.
இதையும் படிங்க: இர்ஃபான் பதானை தொடர்ந்து தமிழ் சினிமாவில் களமிறங்கும் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரர்… அதுவும் எந்த படத்தில் தெரியுமா??
அந்த பெண் வேறு யாரும் இல்லை. தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த விஜயகுமாரிதான் அவர். பின்னாளில் இவர் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.